watch video: கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா... கில்லியா... மாஸ்டரா... என வாயடைத்த வீரர்கள்!

ரோஜா ரெய்டராக இருக்கும் போது விசில் அடித்து கத்தினார்கள். இவரது கபடி ஆட்டத்தை காண அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.

Continues below advertisement

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ ரோஜா, தனது கணவருடன் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நகரி எம்.எல்.ஏ .ரோஜா தனக்குப் பிடித்தமான கபடி விளையாட்டை எதிரணியின் வீரரான தனது கணவர் செல்வமணியுடன் விளையாடி தனது குழந்தைப் பருவ நினைவுகளை நினைவு கூர்ந்தார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் அவரது ஆற்றலையும் உற்சாகத்தையும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வீடியோவில், நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர், எதிரணி அணியின் அரை கோர்ட்டுக்குள் ரெய்டராக சென்றார். எதிரெதிர் அணிகளுக்காக விளையாடிய ரோஜாவும், செல்வமணியும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ரோஜா ரெய்டராக இருக்கும் போது விசில் அடித்து கத்தினார்கள். இவரது கபடி ஆட்டத்தை காண அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர்.

ஆந்திராவில் 2019ஆம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் அக்கட்சியை சேர்ந்த சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா. 

ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீ லதா ரெட்டி. ரோஜா ஒரு அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகை, 90-களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர்.கன்னட மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரோஜாவின் முதல் படம் ராஜேந்திர பிரசாத்துடன் பிரேமா தபசு ஆகும். இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். ரோஜா தமிழ் திரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola