டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் மிஷன் இம்பாசிபள் பிரான்சைஸின் 7 ஆம் பாகமான மிஷன் இம்பாசிபள் டெட் ரெக்கனிங் ( mission impossible death reckoning part – 1) வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஒரு பக்கா ஆக்‌ஷன் திரில்லராக இந்தப் படம் இருக்கும் என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை.


படம் வெளியாக இன்னும் ஒரே வாரம் இருக்கும் நிலையில்  படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை பற்றிய தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


மிக ஆர்வமாக காத்திருக்கிறேன்


இந்தப் படத்தில் ரயிலில் சண்டைபோடும் காட்சி ஒன்று இருப்பதை ட்ரைலரில் நாம் பார்த்திருப்போம் . இந்தக் காட்சி எடுப்பது மிக சிக்கலானதாக இருந்ததாகவும் ஆனால், மிகச்சிறப்பாக இந்தக் காட்சி வந்திருப்பதாகவும் இந்தக் காட்சியின் மேக்கிங் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார் டாம் குரூஸ். மேலும் இந்தக் காட்சியை மக்கள் அனைவரும் பார்ப்பதற்காக, தான் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.






முந்தையப் படங்கள்


மிஷன் இம்பாசிபல் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதுவரை இந்த பிரான்சைஸில் மொத்தம் ஆறு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன.இந்த ஆறு பாகங்களும் அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் டாம் குரூஸ் ஏதாவது ஒரு புதிய சாதனையுடன் களமிறங்குவார். குறிப்பாக படத்தில் தான் நடிக்கும் ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்துவருவது இந்தப் படங்களை ரசிகர்கள் மிக ஈடுபாட்டுடன் பார்ப்பதற்கு மற்றொரு காரணம். தற்போது மிஷன் இம்பாசிபள் படத்தின் 7-ஆம் பாகத்தின் ட்ரெய்லர் ஒரு நல்ல ஆக்‌ஷன் த்ரில்லரை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கான அனைத்து கூறுகளைக் கொண்டிருக்கிறது.


ஸ்டண்ட் காட்சிகள்


டாம் குரூஸ் தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் தானே செய்ய வேண்டும் என்று உறுதியாக இருப்பவர். கடந்த பாகத்தில் ஓடும் விமானத்தில் தொங்கிக்கொண்டு அவர் நடித்த காட்சி அனைவரையும் மிரள வைத்தது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.


எதிர்கொண்ட சவால்கள்


கடும் சிரமங்களுக்குப் பிறகு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் காரணத்தினால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின் படப்பிடிப்பின் போது படபிடிப்புக் குழுவை  டாம் குரூஸ் திட்டிக்கொண்டிருந்த ஆடியோ ஒன்று வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொண்டு தற்போது இந்தப் படம் வரும் ஜுலை 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.