சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன், மனோரமா, லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது.தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்தின் ரீமேக் தற்போது உருவாகியுள்ளது. 'ஜெயம்கொண்டான்', 'கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இப்படத்தை தயாரித்து, இயக்குகியுள்ளார்..படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க , நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். காசேதான் கடவுளப்பா என்னும் பெயரையே இந்த படத்திற்கு வைத்திருக்கின்றனர். படத்தில் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு , ஆகஸ்ட் மாதமே நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்குள் படத்தை முடித்துள்ளனர் படக்குழு. மிர்ச்சி சிவா இறுதியாக நடித்த படம் சுமோ. இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக படங்கள் ஏதும் நடிக்காத சிவா தற்போது மீண்டும் திரையில் தோன்ற இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சிவா , தான் ஏன் இத்தனை நாட்களாக படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார்.
அதில் "எனது குடும்பம் வேறு , சினிமா வேறு இரண்டையும் நான் பிரித்துதான் வைத்திருப்பேன். வீட்டில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பேன்.தமிழ்பட ம் பண்ணும் பொழுது காலையில தியேட்டர் எல்லாம் நிறைந்ததுமே இனிமேல் படம் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.ஏன்னா 4 மணிக்கு டிக்கெட் புக் பண்ணி இவ்வளவு பேர் படம் பார்க்க போறாங்கன்னா..நம்ம மேல எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள்.அதை கெடுக்க வேண்டாம்...இனிமேல் 100 சதவிகிதம் படத்தின் கதை பிடித்தால் மட்டுமே பண்ண வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.அதன் பிறகு நான் படமே பண்ணவில்லை. ஏன்னா நம்ம படத்தை பார்க்குறவங்க எல்லாமே சாமானியர்கள்தான். அவங்க பணத்தை வீணடிக்க கூடாதுனு பயம் வந்துடுச்சு.நான் நடிக்குறது காமெடி படம் .ஆனால் சீரியஸா இருந்துதானே ஆவோம்.