மலையாள சினிமாவின் முக்கிய நடிகருள் ஒருவராக அறியப்படும் டொவினோ தாமஸின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ மின்னல் முரளி’ .குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கதைத்தேர்வில் அசத்தி வருபவர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் பாசில் ஜோஸப் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ளது  இந்த திரைப்படம் .  இது ஒரு சூப்பர் ஹீரோ படம்.  மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ மின்னல் முரளி’ என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படத்தின் டீசர் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படத்தில் டொவினோ தாமஸ் , ஒரு சிகப்பு துணி கொண்டு ,  வாய் பகுதியை மூடியுள்ளார். சாதாரண மனிதராக இருக்கும் முரளி, மின்னல் முரளியாக மாறும் பொழுதெல்லாம் ஹாலிவுட் படங்களின் சூப்பர் ஹீரோக்கள் அணிந்திருக்கும் ஆடையை போன்றே சிகப்பு, ஊதா நிறத்திலான ஆடையை அணிந்து சாகசங்களை செய்ய தொடங்கி விடுகிறார். அந்த ஆடையின் மைய பகுதியில் மின்னல் முரளியின் அடையாள பேட்ஜ் ஒன்றும் பதிக்கப்பட்டுள்ளது. 




இந்நிலையில் மின்னல் முரளி படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகை (டிசம்பர் 24 ) அன்று நேரடியாக , நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாவுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் “ கிறிஸ்துமஸ் அன்று வருகிறார் மின்னல் முரளி , இந்த கிறிஸ்துமஸ் மின்னும்” என குறிப்பிட்டுள்ளது.டொவினோ தாமஸ் , மின்னல் முரளி கதாபாத்திரம் தனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று, அந்த கதாபாத்திரத்தோடு ஆரம்பத்தில் இருந்தே ஒன்றிவிட்டேன் என கூறியுள்ளார். மேலும் இந்த படம் தனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாகவும் , நிறைய கற்றுக்கொண்டேன் எனவும் கூறியுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளம் கொரோனா பேரிடர் சமயங்களில் சினிமா துறைக்கு பெரும் உதவியாக இருந்தது, படம் வெளியானால் என்னை போலவே மின்னல் முரளி கதாபாத்திரத்தை மக்களும் ரசிப்பார்கள் என தான் நம்புவதாக டொவினோ தாமஸ் கூறியுள்ளார். 







அதே போல படத்தின் இயக்குநர் பாசில் ஜோசப் பேசுகையில் “ மக்கள் தங்களின் எமோஷனுடன் கணெக்ட் செய்துக்கொள்ளக்கூடிய ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க நாங்கள் விரும்பினோம் , இதற்காக எங்களின் குழு கடுமையாக உழைத்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்காக தானும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். படத்தில் சூப்பர் ஹீரோ மின்னல் முரளிக்கு வில்லனாக ஜோக்கர் பட நாயகன், குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஹரிஸ்ரீ அசோகன்,அஜு வர்கீஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கனடா மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:


வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி


அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!


மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?


மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?