அமிதாப்பச்சன் இந்தியாவின் மெகா ஸ்டார். லண்டனின் மேடம் டுஸ்ஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் இவருக்கு மெழுகுச் சிலை இருக்கிறது. இவரது மனைவி ஜெயாபச்சன். இவரும் ஆரம்ப காலங்களில் சினிமா துறையில் இருந்தவர் தான். இவர்களின் உயர வித்தியாசம் இவர்கள் திருமணம் முடிந்த காலத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது. ஆனால் ஏச்சுக்கள், பேச்சுக்கள் எல்லாம் தாண்டி இன்றுவரை இந்த தம்பதி சக்சஸ்புல் தம்பதியாக இருக்கின்றனர்.


இவர்களது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று குடும்பமே செலிப்ரிட்டி குடும்பம் தான். மகள் ஸ்வேதா நந்தா திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் கூட அவரது மகள் நவ்யா நந்தா இப்போது ஒரு செலிப்ரிட்டி கிட் ஆக உலா வருகிறார்.


ஜெயாபச்சன் குடும்பத்தை சுற்றி எல்லாமே பாசிடிவ் விஷயங்களாக இருந்தாலும் கூட அவருக்கு என்று ஒரு க்ரே ஏரியா இருக்கிறது. ஆமாங்க அம்மணி எப்போதும் ஒரு ஆங்க்ரி பேர்ட் போலவே எகிறிக் குதிப்பார். அது ஊடகங்களுக்கு குறிப்பாக ஃபோட்டோ ஜார்னலிஸ்ட்டுகள், பாப்பராஸிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் அனைவருமே ஜெயாபச்சனை எப்போது க்ளிக் செய்தாலும் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் செல்ல மாட்டார்கள்.


அப்படித்தான் அண்மையில் விமான நிலையத்தில் ஜெயாபச்சன் தனது உறவினர்களுடன் வர பாப்பராஸிகள் போட்டோ எடுக்கின்றனர். அதில் ஒரு புகைப்படக்காரர் தவறி விழுந்து விடுகிறார். உடனே அவரைப் பார்த்து நீங்கள் இன்னும் பலமாக விழுந்திருக்கலாம் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.


இத்தனை ஆணவமா? ஒரு செலிப்ரிட்டி என்றால் ஃபோட்டோ எடுக்கத்தானே செய்வார்கள்? அதிலென்ன தவறு. அதற்காக ஒரு நபர் கீழே விழவேண்டும் என்று சபிப்பதா? இது ஒரு வயது முதிர்ந்த பெண்ணுக்கு, ஒரு ஸ்டார் குடும்ப பெண்ணுக்கு அழகா என்று சரமாரியாக விளாசினர். இன்னும் சிலர் அந்த அம்மாவுக்கு என்னதான் கோபம்? எப்பவுமே ஹை ஃப்ளேமிலேயே இருக்கிறார் என்று கிண்டல் செய்தனர்.


இந்நிலையில் ஜெயாபச்சனை அப்படியே இமிடேட் செய்து மிமிக்ரி வீடியோ ஒன்றை ஓர் இளம் பெண் வெளியிட்டு அப்ளாஸ் அள்ளியுள்ளார். இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் வைரல் வீடியோ இதுதான்.இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சபாஷ் சொல்லி பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர் இப்படித்தான் அசிங்கப்படுத்தி ஜெயாபச்சன் போன்றோருக்கு அவர்களது செயலை புரிய வைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர். இன்னும் ஒருவர் பணத் திமிருக்கு பதிலடி என்று பதிவிட்டுள்ளனர்.


இதோ அந்த வீடியோ உங்களுக்காக: