ஹாலிவுட் ஸ்டார்ஸின் பொது நிகழ்ச்சி என்றாலே கலக்கல்ஸ்தான். பகலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கே பார்த்து பார்த்து கிளம்பும் நட்சத்திரங்களுக்கு, இரவு நிகழ்ச்சி என்றால் சொல்லவா வேண்டும், தக தக என மின்னும் கிளாமர் ஆடைகளில் வெவ்வேறு விதமான கெட்டப்புகளில் ரெட்கார்பெட்டில்  அசத்துவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடைபெறும் பிரபல ஃபேஷன் நிகழ்ச்சியான மெட் காலாவில் (met gala) பங்கேற்பதற்காக ஹாலிவுட் நட்சத்திரங்கள் அணிவகுத்த செய்திகள்தான் டாக் ஆஃப் தி வேல்டாக இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறமால் இருந்தது. ஓராண்டிற்கு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாலோ என்னவோ எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தீமிற்கு ஏற்றவாறு நட்சத்திரங்கள் ஆடைகள் அணிவகுப்பை நடத்துவர்.   இந்நிலையில் கடந்த மெட் காலா நிகழ்ச்சிகளில் வித்தியாசமான காண்செப்ட் ஆடைகள் அணிந்து வந்து பலரின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் ஸ்டார்ஸ் சிலரை கீழே காணலாம்.


கிம் கார்டாஷியனின் உடல் நிற ஆடை.!


ஹாலிவுட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் அதில் பங்கேற்கும் கிம் கார்டாஷியன் எப்போதும் கவனிக்கப்படுவார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் கிம் அணிந்திருந்த உடை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. தனது ஸ்கின்டோனில் , உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடையை அணிந்து ரெட் கார்ப்பெட்டில் நடந்தார். இந்த ஆடையும் பலரின் கேளிக்குள்ளானது. 





ஒளிரும் விளக்காய் வந்த கேட்டி பெர்ரி!


கடந்த 2019-ஆம் நடைப்பெற்ற விழாவில் அமெரிக்க பாடகியும் , பாடலாசிரியருமான கேட்டி பெர்ரி விளக்குகளை எரியவிட்டு, தகதகவென மின்னும் கிரிஸ்டல் ஆடையை அணிந்து பலரின் கவனத்தை ஈர்த்தார். மேலும் இவர் தலையில் வைத்திருந்த கிரீடமும் மின்விளக்குகளால் மின்னியது. பார்க்க நடந்து வரும் அலங்கார விளக்கைப்போல அச்சு அசலாக ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்தார் கேட்டி. இவரின் துணிச்சல் மிகுந்த சாகச ஆடை மிகப்பெரிய வைரலானது.




கத்தோலிக்க ஃபாதராக வந்த சாட்விக்!


எப்போதுமே பெண்கள்தான் மெட் காலா நிகழ்வில் அதிகம் கவனம் பெறுவார்கள் ஆனால் அவர்களுக்கும் டஃப் கொடுப்பவர்தான்  சாட்விக் போஸ்மென். 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மெட் காலாவில் வழங்கப்பட்ட தீமிற்கு பொருத்தமாக கத்தோலிக்க மதத்தை சார்ந்த ஃபாதரை போல  வந்திருந்தார். அவரின் ஆடையில் பதிக்கப்பட்ட சிலுவைகள் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சாட்விக் பிளாக் பாந்தர் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர் இவர் சமீபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





பியோனஸின் கண்ணாடி ஆடை! 


சிவப்பு, பச்சை, வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட நெட்டெட் ஆடையை அணிந்து வந்து  2015-ஆம் ஆண்டு மெட் காலாவை சிறப்பித்திருந்தார் பியோனஸ் . கொடுக்கப்பட்ட தீமிற்கும் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் அதிகமாக பேசப்பட்டது. சிலர் இவர் ஆடை எங்கு அணிந்திருக்கிறார் என கேலியும் செய்தனர்.





இது ரிஹானாவின் ஆம்லெட் ஹவுன் :


2015-ஆம் ஆண்டு நடைப்பெற்ற மெட் காலா நிகழ்ச்சியின் போது ஹாலிவுட் திரைப்படத்தின் நடிகையும் , மாடலுமான ரிஹானாவின் ஆடை மிகப்பெரிய கேலிக்குள்ளானது. அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு பூக்கள் நிறைந்த மஞ்சள் நிற கவுன் போல தோற்றமளித்தாலும், புகைப்படத்தில் அது முட்டை உடைத்து ஊற்றி செய்யப்பட்ட ஆம்லெட் போலவும் , பீட்சா போலவும் இருப்பதாக மீம்ஸ் உருவாக்கப்பட்டு அதிகமாக ட்ரால் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை மெட் காலா நிகழ்ச்சியின் போதும் ரிஹானாவின் ஆம்லட் ஆடை வைரலாவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடையை சீனாவின்  Guo Pei என்பவர் 6,000 மணி நேரம் செலவிட்டு வடிவமைத்துள்ளார். இதன் மொத்த எடை 25 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.




பறவையான செர்!


1974-ஆம் ஆண்டு பிரபல பாடகி செர் அணிந்து வந்த ஆடை இன்றளவும் பிரபலம். அதில் அவர் ஒரு பறவையை போல உடையணிந்திருந்தார், கைகள் மற்றும் கால்களில் இறகுகளை பதித்து அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது,




சூரிய கடவுளானார் பில்லி பார்டர்!


2010-ஆம் ஆண்டு நடந்த மெட் காலாவில் எகிப்து மக்களின் கடவுளாக அறியப்படும் சூரியனை போலவே வேடமிட்டு நிகழ்ச்சியின் கவனத்தை ஈர்த்தார் பில்லி.




ஃபோர்-இன் -ஒன் ஆடையில் லேடி காகா!


அமெரிக்கன் பாடகியான லேடி காகா, கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் , உடலை முற்றிலும் கவர் செய்தமாதிரியான மேக்‌ஸி ஆடை ஒன்றை அணிந்து வந்தார். பிறகு கார்பெட்டில் நின்று ஒவ்வொன்றாக கழட்டிய அவர் , 4 விதமான ஆடைகளை ஒரே ஆடையிலிருந்து மாற்றிக்காட்டினார்.




பூவாகிப்போன கெஸிகா! 


பிரபல வடிவமைப்பாளர் oscar de la renta  வடிவமைத்த இந்த ஆடையில் ஜெஸிகா ஒரு பொம்மையை போல இருந்தார். கருப்பு வெள்ளை காம்போவில் பூப்போல உருவான இந்த ஆடையை 2014-ஆம் ஆண்டு அணிந்திருந்தார் ஜெஸிகா 





அரக்கனாய் வந்த ஜார்ட் லிடோ!


தனது தலையை கையில் வைத்துக்கொண்டு , ஒரு கொடூர அரக்கன் போல தோற்றமளித்தா ஜார்ட். இந்த கான்செப்ட் ஆடைகளை அணியும் வகையில்தான் 2019 மெட் காலாவின் தீம் கொடுக்கப்பட்டிருந்தது. சிகப்பு நிறத்தில் ஆடையும் அதற்கு பொருத்தமாக இருந்தது.




மேகமாய் வந்த சிமோன் பைல்ஸ்! 


ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீரங்கனையான சிமோன் , மேகம் போல தோற்றம் கொண்ட ஆடையை அணிந்து வந்து இந்த ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார்.இந்த ஆடை ஒரு த்ரீ-ஒன் ஆடை என்பது குறிப்பிடத்தக்கது