கீழடி அகழாய்வு பணிகளை தொடங்கி, தமிழரின் நாகரிகம் இந்தியாவிற்கே முன்னோடி என்பதை உலகறிய வைக்க காரணமான தொல்லியல் துறை அதிகாரியான அமர்நாத் இராமகிருஷ்ணாவை மீண்டும் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமித்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியிருக்கிறது மத்திய அரசு.



தனது குடும்பத்துடன் அமர்நாத் இராமகிருஷ்ணா


அமர்நாத் இராமகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவதை மதுரை எம்.பி-யும் எழுத்தாளருமான. சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் ‘மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.






இது குறித்து ’ABP நாடு’ செய்தி நிறுவனத்திற்கு பேசிய அமர்நாத் இராமகிருஷ்ணா, மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,இங்குள்ள பணிகளையெல்லாம் முடித்துவிட்டு, இன்னும் 10 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வந்து தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.