ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய உற்சாகத்தில் ரோலர் கோஸ்டர், பம்பர் கார்களில் குதூகலத்துடன் தலிபான்கள் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப்பிறகு அமெரிக்க ராணுவப் படை திரும்பப்பெற்றதையடுத்து தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப்பிடிப்பதற்காக பல்வேறு உள்நாட்டுக்கலவரங்கள் எல்லாம் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் மக்கள் சிலர் தாலிபான்களின் மேற்கொள்ளும் அடிமைத்தனத்திலிருந்து தப்பிப்பதற்காகப் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லத்தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தான் ஆப்கனில் ஒவ்வொரு பகுதியாக தலிபான்கள் அவர்களின் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் ஒரு பகுதியாக தலைநகர் காபூலைக் கைப்பற்றிய ஒரு நாள் கழித்து அதன் உற்சாகத்தில் தலிபான் உறுப்பினர்கள், காபூலில் உள்ள தீம் பார்க்கில் ஆயுதங்களுடன் புகுந்த தாலிபான்கள அங்கிருந்த ராட்டினம், டாட்ஜெம் எனப்படும் பேட்டரி கார்களில் உற்சாகத்துடன் விளையாடினர். இவர்களில் சிலர் கையில் ஆயுதங்களுடன் குதிரை சவாரிகள் எல்லாம் மகிழ்ச்சியுடன் மேற்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்வி, சுதந்திரம் போன்ற பல்வற்றிற்கு ஷரியத் சட்டத்தின் கீழ்கட்டுப்பாட்டுள் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தப்போதும் கடந்த ஆட்சியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த தலிபான்கள் தற்போது இதுப்போன்ற பொழுதுபோக்கு விளையாட்டிற்கு ஷரியத் சட்டத்தின் கீழ் அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.