பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்தார்.அதிலிருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து புத்தம் புது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார் மீரா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார், மீரா ஜாஸ்மின். இந்நிலையில் இன்று மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் கிடுகிடுவென பரவி வருகிறது மீரா ஜாஸ்மினின் இந்த நியூ க்ளிக்.
அதிக சம்பளம் வாங்கிய நடிகை :
தமிழில் ரன்,புதிய கீதை, சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் , இவரின் ஆக்டிவ் நடிப்பிற்கும் , கொஞ்சி கொஞ்சிப்பேசும் வசனங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக புதிய கீதை படத்தில் குழந்தை தனத்துடன் கூடிய வெகுளியான கல்லூரி மாணவியாக நடிகர் விஜக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழ் சினிமா தவிர்த்து நிறைய மலையாள படங்களில்தான் மீரா ஜாஸ்மின் கவனம் செலுத்தி வந்தார்.கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ’பாடம் ஒன்னு: ஒரு விளப்பம்’ என்ற மலையாள திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதைப் பெற்றார் மீரா ஜாஸ்மின். இது தவிர சிறந்த நடிகைக்கான தமிழ அரசு மற்றும் கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்றும் அறியப்படுகிறார். யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஒரு சிறந்த நடிகை இப்படி சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டாரே என ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் கூட வருத்தப்பட்டனர்.
மீரா ஜாஸ்மினின் திரைப்பயணம் :
கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்ரதாரன் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார் மீரா ஜாஸ்மின். அதனைத்தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்திலும், ஷியாமுடன் பாலா படத்திலும் நடித்தார். தமிழ் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்த அவர் கடந்த 2004 ஆம் ஆண்டும் ‘அம்மயீ பகுன்டி’ படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.அதே வருடத்திலேயே மணி ரத்னத்தின் ‘ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த அவர் 2005 இல் விஷால் நடிப்பில் வெளியான சண்டகோழி படத்தில் இணைந்தார். இந்தப்படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது.
ரீ-என்ட்ரி :
2016 இல் மலையாளத்தில் வெளிவந்த பத்து கல்பனைகள் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படமாக அமைந்தது. 2018 இல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக காட்சி ஒன்றில் நடித்திருப்பார். மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட மீரா பின்னர் பெரிய நடிகையாகி மாறி, பாடம் ஒன்ணு படத்திற்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். திருமணத்திற்கு பிறகு திரைவாழ்கையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குள் ஈடுபட்ட பிறகு மீண்டும் திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீரா ஜாஸ்மின். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து பிற மொழிகளில் அவர் கம்பேக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது.