தமிழில் ரன், புதிய கீதை, சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் , இவரின் ஆக்டிவ் நடிப்பிற்கும் , கொஞ்சி கொஞ்சிப்பேசும் வசனங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக புதிய கீதை படத்தில் குழந்தை தனத்துடன் கூடிய வெகுளியாக கல்லூரி மாணவியாக நடிகர் விஜக்கு ஜோடியாக நடித்திருப்பார். தமிழ் சினிமா தவிர்த்து நிறைய மலையாள படங்களில்தான் மீரா ஜாஸ்மின் கவனம் செலுத்தி வந்தார்.கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ’பாடம் ஒன்னு: ஒரு விளப்பம்’ என்ற மலையாள திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதைப் பெற்றார் மீரா ஜாஸ்மின். இது தவிர சிறந்த நடிகைக்கான தமிழ அரசு மற்றும் கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.







மலையாள சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்றும் அறியப்படுகிறார். யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஒரு சிறந்த நடிகை இப்படி சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டாரே என ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் கூட வருத்தப்பட்டனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மீரா ஜாஸ்மின் மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாள சினிமாவில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.சத்யன் அந்திக்காடு அந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.







சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாத மீரா ஜாஸ்மினுக்கு ஏராளமான ரசிகர்கள் பக்கம் மட்டுமே உள்ளது.சமீபத்தில் துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவப்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா கிடைத்தது ஒரு வித மகிழ்ச்சி என்றால் அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து 7 வருடங்களுக்கு முன்பிருந்த மீரா ஜாஸ்மின் போலவே இளமையாக தோற்றமளிப்பது , அவரது ரசிகர்களுக்கு கூடுதல் குஷியை ஏற்படுத்தியுள்ளது. மீரா ஜாஸ்மின் உடல் எடை அதிகரித்த புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வந்த சூழலில், ஸ்லிம்மாக இளம் நாயகிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் டிரான்ஸ்ஃபர்மேஷன் கொடுத்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன. விரைவில் அவர் சில தமிழ்  படங்களிலும் ஒப்பந்தமாவார் எனவும் எதிர்பார்க்கலாம்.