சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உடன் பிறப்பே’. கத்துக்குட்டி திரைப்படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கிராமத்து சப்ஜெக்டை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். உடன்பிறப்பே என்னும் தலைப்பு மூலமாக இது உறவுகள் , அண்ணன் தங்கை பாசம் போன்ற செண்டிமெண்ட் காட்சிகளை ஓங்கி உரைக்கும் படமாக அமையும் என கருதப்படுகிறது இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலரில் இடம்பெற்ற ”என் புருஷன் சட்டத்தை நம்புறாரு, எங்கண்ணே சத்தியத்தை நம்புது .... ரெண்டு ஒன்னுதான்னு நான் நம்புறேன்” என்னு வசனம் படத்தின் ஒன்லைனாகவே அமைந்திருந்தது.
ஜோதிகாவின் 50 வது படமாக உடன்பிறப்பே உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிகை ஜோதிகாவுடன் முதன் முறையாக நடித்துள்ள சூரி. அவருடன் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். ஆன் தி ஸ்பாட்டில் அடிக்கும் சில வசனங்களை நடிகை ஜோதிகா எப்படி ஏற்றுக்கொள்வார், அவரை இதுவரையில் சந்தித்தது கூட இல்லையே என்ற அச்சம் சூரிக்கு இருந்ததாம். ஆனால் ஜோதிகா தன்னுடன் இயல்பாக பேசி, என்னை பழகிய நபரை போல நடத்தினார் என்கிறார் சூரி. அவ்வளவு அருமையாக நடிக்கும் நடிகை, தனது குடும்பத்திற்காக கிட்டத்தட்ட 5, 6 வருடமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தது , அவர் செய்திருக்கும் தியாகம். அவரை போன்ற ஒரு நடிகையை நான் பார்த்தது இல்லை. தனது குழந்தைகள் தன்னை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு தயாரானதும் அவர் மீண்டும் சினிமாவிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார் சூரி.