9 மாவட்ட ஊரக உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி 140 இடங்களில் 138 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக வெறும் இரண்டு இடங்களை கைப்பற்றி பின்னடைவை சந்தித்துள்ளது. விசிக 3 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.
12 மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்
மாவட்ட கவுன்சிலர்கள் (140/140)
திமுக கூட்டணி | 138 |
அதிமுக கூட்டணி | 2 |
பாமக | 0 |
அமமுக | 0 |
மக்கள் நீதி மய்யம் | 0 |
நாம் தமிழர் | 0 |
தேமுதிக | 0 |
பிற | 0 |
ஒன்றிய கவுன்சிலர்கள் (1353/1381)
திமுக கூட்டணி | 1004 |
அதிமுக கூட்டணி | 212 |
பிற | 87 |
பாமக | 44 |
அமமுக | 5 |
தேமுதிக | 1 |
நாம் தமிழர் | 0 |
மக்கள் நீதி மய்யம் | 0 |
விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி
விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 பேர் போட்டியிட்ட நிலையில் ஊராட்சி, வார்டு என இதுவரை 110 பேர் வெற்றி பெற்றதாக இயக்கத்தின் நிர்வாகிகள் தகவல் கூறியுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணி 98% நிறைவு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வெற்றி பெற்றவர்களின் முழு நிலவரம் பிற்பகம் 2 மணிக்கு வரவாய்புள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.