நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். 


சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 






இதனிடையே கணவர் வித்யாசாகருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். 8 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில்  பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்தனர். 






நடிகர்கள் ரஜினி,பிரபுதேவா, நடிகைகள் லட்சுமி, குஷ்பூ,சினேகா, ரம்பா, கலா மாஸ்டர் என பல பிரபலங்களும் மீனா வீட்டுக்கு நேரில் சென்று கணவர் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கணவரின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு நடிகை மீனா  முத்தமிட்டு பிரியாவிடை அளித்த  போட்டோக்கள், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீனாவின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார். 


அங்கு வைக்கப்பட்டிருந்த வித்யாசாகரின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர், மீனாவை சந்தித்து “கவலைப்படாதேம்மா.. மனசு தேறுங்க..” என ஆறுதல் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண