Meena Marriage: மறுமணம் செய்து கொள்கிறாரா மீனா; தீயாய் பரவும் வதந்திகள்..உண்மை என்ன?

கணவரின் இறப்புக்கு பின்னர் முடங்கிப்போயிருந்த மீனா சில மாதங்களுக்கு பிறகு தான் சகஜ நிலைக்கு திரும்பினார்.

Continues below advertisement

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

Continues below advertisement

 

இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா :

ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை மோசமான காரணத்தால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த இழப்பு திரையுலகினர் மத்தியிலும் நடிகை மீனாவின் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரின் இறப்புக்கு பின்னர் முடங்கிப்போயிருந்த மீனா சில மாதங்களுக்கு பிறகு தான் சகஜ நிலைக்கு திரும்பினார். அவரின் நண்பர்கள் தான் அவரை மீண்டும்  இயல்பு நிலைக்கு கொண்டு வர முக்கியமான காரணமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பரவி வரும் வதந்திகள்: 

கடந்த சில நாட்களாக நடிகை மீனா மறுமணம் செய்து கொள்ள போவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் பரவி வருகின்றன. குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக கணவரின் நண்பரை அவர் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் கோர்வையாக காட்டுத்தீ போல பரவி வந்தன. இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்தது.

ABPக்கு திருமணம் குறித்து மீனா அளித்த தகவல் : 

இப்படி வதந்திகள் பரவி வர ஏ பி பி  செய்தி நிறுவனம் நடிகை மீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, "நான் இந்த வதந்திகளை பற்றி எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை”  என்று கூறினார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola