சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 


 



 


இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா :


ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை மோசமான காரணத்தால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த இழப்பு திரையுலகினர் மத்தியிலும் நடிகை மீனாவின் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரின் இறப்புக்கு பின்னர் முடங்கிப்போயிருந்த மீனா சில மாதங்களுக்கு பிறகு தான் சகஜ நிலைக்கு திரும்பினார். அவரின் நண்பர்கள் தான் அவரை மீண்டும்  இயல்பு நிலைக்கு கொண்டு வர முக்கியமான காரணமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


வதந்திகளுக்கு கண்டனம் :


கடந்த சில நாட்களாக நடிகை மீனா மறுமணம் செய்து கொள்ள போவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் பரவி வருகின்றன. குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக கணவரின் நண்பரை அவர் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் கோர்வையாக காட்டுத்தீ போல பரவி வந்தன. இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்த வதந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கணவரின் மறைவின் அதிர்ச்சியில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை. அவருடன் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளை சுமந்து கொண்டே எனது நாட்களை கடத்தி வருகிறேன். என்னுடைய மனம் இருக்கும் சூழலில் என்னால் இரண்டாவது திருமணம் குறித்து நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என் மிகவும் மன வேதனையுடன் என்னுடைய பிரைவசியை மதிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்" நடிகை மீனா. 


 



மீனாவின் இந்த வேண்டுகோளுக்கு நெட்டிசன்களும் அவர்களின் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்."ஊடகங்கள் மற்றவர்கள் மீது பட்சதாபம் காட்ட வேண்டும். திருமணம் குறித்தோ அல்லது மறுமணம் குறித்தோ சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்கும் வரை அதை வணீக ரீதியாக ஊடகங்கள் உறுதிப்படுத்த கூடாது"  என ஒருவர் பதிவிட்டுள்ளார்.  


உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் :


கடந்த ஆகஸ்ட் மாதம் உறுப்பு தானம் செய்த மீனா அது குறித்து பேசிய போது "உறுப்பு தானம் என்பது உயிரை காப்பாற்ற ஒரு உன்னதமான வழிமுறையாகும். தனிப்பட்ட முறையில் என்னுடைய அனுபவம் மூலம் சொல்வதென்றால் பல நாட்களாக உறுப்பு பாதிப்பால் போராடும் நபர்களுக்கு உறுப்பு தானம் மூலம் இரண்டாம் வாய்ப்பு கொடுக்க முடியும். என்னுடைய கணவருக்கு உறுப்பு தானம் செய்யப்பட்டு இருந்தால் என் வாழ்க்கையை மாற்றியிருக்க முடியும். ஒருவர் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்" என்றார் மீனா.