திரைத்துனையினரையும், மக்களால் கொண்டாடப்பட்ட படங்களையும் கொண்டாடும் வகையில் துபாயில் ரெட் சீ ஃபிலிம் ஃபெஸ்டிவல் (Red Sea Film Festival) என்ற திரைப்படத் திருவிழா நடைப்பெற்றது. இதில், சர்வதேச திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 


பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிக்கட்டி பறக்கும் நடிகர் ஷாருக்கான். பல ஆண்டுகளாக திரையுலகின் செல்லப்பிள்ளையாக இருக்கும் இவர், தான் நடித்த பல படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அது மட்டுமன்றி, இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் வரிசையிலேயே உள்ளது.


இவர் நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும், ஷாருக்கான் என்ற பெயரை உலகிற்கு தெரியப்படுத்திய படம்,  ‘தில் வாலே துல்லயனியா லே ஜாயேங்கே’. கஜோலுடன் இவர் இணைந்து நடித்த இப்படம், இந்தியில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது. 1995ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இப்படத்திற்கு, இன்றளவும் ரசிகர்கள் ஏராளம். 


ஷாருகானைப் பார்த்து ஷாக் ஆன நடிகை:


பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற ரெட் சீ ஃபிலிம் ஃபெஸ்டிவல் துபாயில் நடைப்பெற்றது. இதில், நடிகர் ஷாருக்கான், நடிகை கஜோல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்சியில் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்ற தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டது. இதையடுத்து, இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஷாருக்கானை, நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எழுந்து நின்ற ஷாருக்கானைப் பார்த்து அவரது அருகில் அமர்ந்திருந்த ஹாலிவுட் நடிகை ஷாரோன் ஸ்டோன் இன்ப அதிச்சியடைந்து, நெஞ்சில் கை வைத்துக் கொண்டு  ‘ஓ மை காட்’ என்று ஆர்ப்பரித்தார். 


 






ஷாருகானின் ரியாக்ஷன்:


ஹாலிவுட் நடிகை ஷாரோன் ஸ்டோன் தன்னைப் பார்த்து, அப்படி இன்ப அதிர்ச்சியடைந்ததை சிரித்துக் கொண்டே பார்த்த ஷாருக்கான், குனிந்து அந்த நடிகையின் கன்னத்தில் முத்தமிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 






ஷாருகான் பேச்சு:


ரெட் சீ திரைப்படத் திருவிழாவில் தில் வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில நடித்ததற்காக ஷாருகானிற்கு ஒரு சிறிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய ஷாருக்கான், “இந்நிகழ்ச்சியில் இந்த விருதை வாங்குவதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இடத்தில் எனது அனைத்துலக ரசிகர்களையும் காண்பதில் மகிவும் பெருமைப்படுகிறேன். சினிமா துறையில் வளர்ந்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறன்” என்று கூறினார்.


மேலும் பேசிய அவர், “பல்வேறு கலாச்சாரங்களை சேர்ந்த மனிதர்கள் ஒன்றுகூடுவது சினிமாவால்தான். மொழி அல்லது கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் உணர்ச்சிகளைத் தூண்டுவதால் நான் திரைப்படங்களை அதிகம் விரும்புகிறேன். திரைப்படங்கள் பன்முகத்தன்மையை மதிக்கும் வகையில் உள்ளன. திரைப்படங்கள் வித்தியாசத்தைக் கண்டு பயப்படாமல் இருப்பதற்கான மிக அழகான வழியையும் மனிதர்களுக்கு கற்றுத் தருகிறது” என்று பேசினார் ஷாருக்கான்.