மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் மக்கள் கலைஞன்  என கொண்டாடப்படும் விஜய் சேதிபது , விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். நாயகிகளாக மாளவிகா மோகன், ஆண்ட்ரியா விஜய் ஆகியோரும்அர்ஜூன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். படத்தை சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்திருந்தார்.  துள்ளல் இசை விருந்தை ராக் ஸ்டார்  அனிருத் வழங்கியிருந்தார்.இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமைந்தது . மேலும் விஜய் சேதுபதியின் ’பவானி’ கதாபாத்திரமும் , அவர் நடித்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.


விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் மாறுபட்ட நடிப்பை ‘மாஸ்டர்’ படத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற ’மாஸ்டர்’ திரைப்படம் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை படைத்தது. இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம்  உலக அளவில் பாக்ஸ் ஆஃபிஸ் இடத்தை பிடித்துள்ளது.  2021ல் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் மாஸ்டர் திரைப்படம் 45வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம்  என்ற பெருமையும் மாஸ்டர் படத்திற்கு கிடைத்துள்ளது. இதனை  இந்தியன் பாக்ஸ் ஆபீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்  உறுதிபடுத்தியுள்ளது.


 






இதை அறிந்த விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான  மாஸ்டர் படத்தை மற்ற மொழி ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். மலையாளம் சினிமாவில் விஜய்க்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம், மாஸ்டர் படம் மூலமாக தெலுங்கு சினிமாவிலும் விஜய்யின் மார்க்கெட் மவுசு அதிகரித்துள்ளது.  இது தவிர இன்ஸ்டாகிராமில் அதிகமாக குறிப்பிடப்பட்ட   கதாநாயகன் என்ற பட்டத்தையும் விஜய் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் 14.3 மில்லியன் முறை விஜய்யின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.






இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் மாஸ்டர் படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கூட , படத்தை புகழ்ந்து தள்ளியிருந்தார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் துவக்க அழைப்பாளராக வந்த சுரேஷ் ரெய்னா , மாஸ்டர் படத்தை தானும் தன் மகளும் இந்தியில் பார்த்ததாகவும் , படம் வேற லெவலில் இருந்ததாகவும் பாராட்டி தள்ளினார். குறிப்பாக தனது மகளுக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது என குறிப்பிட்டிருந்தார். முன்னதாக மாஸ்டர் படத்தில் இடம்பிடித்திருந்த “வாத்தி கம்மிங் “ என்ற பாடலுக்கு அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் நடமாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.