பாலிவுட் ஸ்டார்களில் ஒருவரான அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்துகொண்டு கடந்த 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே கடந்த 2001ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகி 7 தேசிய விருதுகளையும் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லகான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண் ராவை காதலித்து இரண்டாவதாக கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
கிரண் ராவ் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ’டோபி காட்’ படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. 16 ஆண்டுகால காதல் வாழ்க்கைக்குப் பிறகு இவர்கள் கடந்த ஜூலை மாதம் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து, அமீர்கான் தனது ‘தங்கல்’ படத்தில் மகளாக நடித்த ஃபாத்திமா சனா ஷேக்கை மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன
மேலும், அடுத்ததாக ‘லால் சிங் சட்டா’ படம் வெளியானவுடன் அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அமீர்கானுக்கும் தனக்கும் திருமணம் என்ற வதந்தி குறித்து ஃபாத்திமா சனா தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டுள்ளது.
நான் இதுவரை சந்திக்காத ஒரு சில பேர் என்னைப் பற்றி எழுதுகிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்றுகூட அவர்களுக்குத் தெரியாது. இதைப் படிப்பவர்கள் நான் 'நல்லவள் இல்லை' என்று நினைக்கிறார்கள். அந்த நபரிடம், 'என்னைக் கேளுங்கள், நான் உங்களுக்கு பதில் தருகிறேன்' என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இது என்னைத் தொந்தரவு செய்கிறது, ஏனென்றால், மக்கள் என்னை தவறாக கருதுவதை நான் விரும்பவில்லை” என்று பேசியுள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN vs Karnataka: கடைசி பந்தில் சிக்சர்... தமிழ்நாடை காப்பாற்றிய ஷாரூக்கான்... தொடர்ந்து 2வது முறை சாம்பியன்!
‛உண்மையாவே விக்குறீங்களா...’ சேலத்தில் சுடச்சுட ‛ஒட்டகப் பால்’ டீ விற்பனை!
Dhoni Viral Pic: தமிழ்நாடு வெற்றியை ரசித்த தோனி... சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஷாரூக்கான்?