அஜித்திற்கு உலகம் சுற்ற ஐடியா கொடுத்த பெண்... யார் இந்த மரல் யாசர்லூ?

உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை நடிகர் அஜித் டெல்லியில் சந்தித்து உரையாடியுள்ளார்

Continues below advertisement

தல அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது, அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீப காலமாகவே, ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு தாஜ்மஹாலை ரசித்ததுடன் அல்லாமல், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்துள்ளார் அஜித். இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Continues below advertisement

உலகம் முழுக்க பைக்கிலேயே சுற்றி வந்த சாகசப் பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் அஜித். மேலும் , எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்துள்ளார். மாரல் யாசர்லூ இதுவரை 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய, 1 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும்போது இந்த சாதனையை செய்துள்ளார். மாரல் யாசர்லூ உடனான இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் , தகவலையும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 39 வயதாகும் யாசர்லூ ஈரானை சேர்ந்தவர். 2004ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்காக அவர் இந்தியா வந்தார். இவர் பைக் ரேஸர், பேஷன் டிசைனர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர். இந்த சந்திப்பிற்கு பிறகு அஜித் பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பைக்கில் செல்வதற்கான திட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

தல அஜித் தற்போது, நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பணிகள் 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி, எதிர்பாராத கொரோனா ஊரடங்கால் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், வலிமை திரைப்படத்தின் அப்டேட் வேண்டுமென டிவிட்டரில் குரல் கொடுத்த அஜித் ரசிகர்கள், கோயிலில் பூஜை செய்வது, என அலப்பறையைக் கூட்ட இங்கிலாந்து கிரிக்கெட் மைதானம் வரை வலிமை அப்டேட் என்ற வார்த்தை வைரலாக பரவியது. இதையடுத்து, அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை உணர்ந்த படக்குழுவினர் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பாடலை வெளியிட்டு அவர்களை சமாளித்தனர். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் பணிகளும் நிறைவடைந்து, ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் மீதம் இருந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola