தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரைப்பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 


தமிழ் சினிமாவில் தனக்கென சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இவருடைய இறப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. 




அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:


அ.தி.மு.க. சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ”நடிகர் மனோபாலா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ர செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்; சிறப்பாக செயலாற்றியவர். அவரது மறைவு, கழகத்திற்கும் திரைதுறையினருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், உற்றா உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல். ” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன்


அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.


பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை:


மனோபாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள கே.அண்ணாமலை, “பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பா.ஜ.க.  சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்


”தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழ்த்திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் அவரும் ஒருவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று மனோபால மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:


”பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானர் என்ற செய்தி கேட்டு அதிச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். சிறந்த பண்பாளர், திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவில் வாகும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.


திரை பிரபலங்கள் இரங்கல்:


நடிகர் ரஜினிகாந்த்


நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்., “அருமை நண்பர் மனோபாலா இறப்பு வேதனை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.



நடிகர் கருணாஸ்:


”மனோபாலா அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர், எளிமையான மனிதர்; மனோபாலாவின் மரணம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று நடிகர் கருணாஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.


இயக்குநர் விக்ரமன்


இயக்குநர் விக்ரமன் கூறுகையில்,  நல்ல இயக்குநர், மிகச் சிறந்த நடிகர்; இயக்குநர் சங்கத்தில் சிறப்பாக பணியாற்றினார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல். எளிமையான மனிதர். உதவி இயக்குநர்களுக்கு நிறைய உதவுவார். இயக்குநர் சங்கத்திற்கு பேரிழப்பு.” என்று தெரிவித்துள்ளார்.


நடிகர் கௌதம் கார்த்திக்


”இயக்குனர், நடிகர் மனோபாலா சார் இப்போது நம்மிடையே இல்லை என்று கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது. உங்களுடன் பணிபுரிந்ததில் உண்மையான மகிழ்ச்சி ஐயா! குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...” என்று கெளதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் சீனுராமசாமி


”அண்ணன் மனோபால்வின் மறைவு செய்தியறிந்து உறைந்தேன். அவர் இயக்கிய பிள்ளை நிலா வீட்டில் இடிமுழக்கம் படிப்பிடிப்பு நடந்தது.அதில் அவர் நடித்தார்! என் மீதும் என் குடும்பத்தார் மீதும் பேரன்பு கொண்டவர். பிறரை வாழ்த்தி மகிழ்பவர். வாழ்த்தக்கூடிய மனம் என்பது இயற்கையின் குணம், அது இப்ன்று இயற்கையோடு கலந்து விட்டது. ” என்று வேதனையுடன் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.


தயாரிப்பாளர் டி.சிவா


தனது நண்பர் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் டி.சிவா தெரிவிக்கையில், “நாற்பதாண்டு கால நண்பர் மனோபாலா. எளிமையானவர். எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர். இனிமையான மனிதர்.அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நல்ல கமர்ஷியல் இயக்குநர்.தனிப்பட்ட முறையில் என் நண்பனை இழந்தது வருத்தமளிக்கிறது. அவருடைய சதுரங்க வேட்டை திரைப்படத்தை கூடிய விரைவில் வெளியிடுவதே நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை.” என்று தெரிவித்துள்ளார்.




இயக்குநர் சேரன்:


”தாங்க முடியாத செய்தி... மனதை உலுக்கி எடுக்கிறது.. நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது.... போய்வாருங்கள் மாமா.... #RIPManobala” என இயக்குநர், நடிகர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


நடிகை ராதிகா:


நடிகர் மனோபால மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள, நடிகை ராதிகா.” மனோபாலா மறைவு செய்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். இன்று காலைதான் போன் செய்து அவரை விசாத்தேன். நம்ப முடியாத அதிர்ச்சி. இருவரும் சிரித்து சண்டையிட்டு,சாப்பிட்டு பல விசயங்கள் பற்றி பேசியுள்ளோம். நான் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்.” என குறிப்பிட்டுள்ளார்.


இயக்குநர் பாரதிராஜா:




நடிகர் தம்பி ராமையா:


“உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்; சாதரண நடிகர்களையும் மதிப்பவர்” என குறிப்பிட்டு  நடிகர் தம்பி ராமையா தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.




ALSO READ | Manobala Directed Movies: சிவாஜி முதல் ரஜினி வரை... டாப் ஹீரோக்களை இயக்கியுள்ள மனோபாலா.. லிஸ்ட் இதுதான்!