மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


மஞ்சும்மெல் பாய்ஸ்


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மஞ்சும்மல் பாய்ஸ். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கொச்சியில் மஞ்சும்மல் என்கிற ஊரைச் சேர்ந்த ஒரு நண்பர்கள் குழுவுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானல் குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் , மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது. கமல்ஹாசன் இயக்கிய குணா படத்தை மிக சிறப்பான முறையில் ஒரு ரெஃபரன்ஸாக இப்படத்தில் இயக்குநர் சிதம்பரம் பயன்படுத்தி இருக்கிறார்.  ஒருவகையில் இப்படம் கமல்ஹாசனின் குணா படத்திற்கு புகழாரம் சூட்டுவதுபோல் அமைந்துள்ளது. 


வசூல்






விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் இந்தியளவில்  10 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து எல்லா திரையரங்குகளிலுல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நான்கு நாட்களில் இப்படம் 14.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2024 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற. மறுபக்கம் மலையாளத்தில் வெளியாகும் அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்று வருகின்றன, சமீபத்தில் வெளியான பிரேமலு, மம்மூட்டி நடித்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மயுகம் தற்போது மஞ்சும்மெல் பாய்ஸ் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.




மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!


Pankaj Udhas Died: பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் இன்று காலமானார்.. ஸ்தம்பித்து போன இந்திய திரையுலகம்..!