Manju Warrier : மஞ்சு வாரியருக்கு பைக் மேல இவ்ளோ காதலா? இப்போ என்ன அப்டேட்

மஞ்சு வாரியர் இன்ஸ்டா மூலம் தனக்கான பிடித்த பொழுதுபோக்கை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Continues below advertisement

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். தனது சொந்த பெயரில் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். நடிகர் தனுசுடன் இணைந்து நடித்த அசுரன் படம் கடந்த ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த 'துணிவு' திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. 

Continues below advertisement

மலையாள நடிகர் திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்ற மஞ்சு வாரியர் விவகாரம் இணையத்தில் ஒரு பேசு பொருளாக இருந்து வந்தது. இருப்பினும் தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். விவாகரத்திற்கு பிறகு சினிமாவிலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். 

 

மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் பொழுதுபோக்கு :     

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் மஞ்சு வாரியர். அதில் தனது நண்பர் சௌபின் ஷாஹிருடன் பைக்கிங் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தான் அவரது சிறந்த டைம் பாஸாக இருந்து வருகிறது. நடிகர் அஜித்துடன் 'துணிவு' திரைப்படத்தில் நடித்த சமயத்தில் படப்பிடிப்பின் ஷெட்யூல் இடைப்பட்ட காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அஜித் பைக் பயணம் மேற்கொண்டார். அதுதான் தற்போது மஞ்சு வாரியருக்கு இந்த பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பரும் நடிகருமான சௌபின் ஷாகிருடன் பைக் பயணம் மேற்கொண்ட சமயத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேலும் "நான் எதிர்கொள்ளாத அச்சங்கள் எல்லாம் இப்போது எனது வரம்புகளாக மாறியுள்ளன...' எனக்கு ஒரு சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருப்பதற்கு நன்றி சௌபின் ஷாகிர் மற்றும் பினிஷ் சந்திரா. நீங்கள் இருவரும் மிகவும் கூலானவர்கள். முக்கியமானது: மோட்டார் பைக்கிங் செய்யும்போது தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள். படங்களில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள். படப்பிடிப்பு இடைவேளையில் நடிகை மஞ்சு வாரியருக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாக தெரிகிறது. மேலும் தங்களின் ஃபேவரட் நடிகையின் ஆஃப்-ஸ்கிரீன் ஆர்வத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். 

பிஸி ஷெட்யூல்: 

மஞ்சு வாரியர்  கடைசியாக சௌபின் ஷாஹிருக்கு ஜோடியாக வெள்ளரிபட்டணம் என்ற அரசியல் நையாண்டி சார்ந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப்பெற்ற 'கயாட்டம்' படத்தில் நடித்திருந்தார். மேலும் ஹிந்தியில் ஆர். மாதவனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து இரண்டாம் பாகமான எம்புரான் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola