Manju Warrier : அசுரன் நாயகி மஞ்சுவாரியரின் அடுத்த படம் எப்படி இருக்கப்போது தெரியுமா..?

அசுரன் படத்தின் நாயகி மஞ்சுவாரியர் அடுத்து நடிக்க உள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சுவாரியர். இந்தியா முழுவதும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டிலும் மிகவும் பிரபலமானார். இதையடுத்து, மஞ்சுவாரியர் அடுத்து நடிக்கப்போகும் படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப்பை திருமணம் செய்த பிறகு, நடிப்பதில் இருந்து விலகியிருந்த மஞ்சுவாரியர் அவரை விவாகாரத்து செய்த பிறகு மீண்டும் நடிப்பில் இறங்கினார். லூசிபர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சுவாரியர், தமிழிலும் அசுரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.



இதனால், மஞ்சுவாரியர் இனி தான் நடிக்க உள்ள படங்களில் அசுரன் போன்று அழுத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மஞ்சுவாரியர் அளித்துள்ள பேட்டியில் அசுரன் படத்திற்கு பிறகு பல இயக்குனர்கள் நல்ல கதைகளுடன் தன்னை சந்திக்க வருவதாகவும், ஆனால் தான் அசுரன் படத்திற்கு இணையான கதையைத் தான் தேடிக்கொண்டிருப்பதாகவும், கூடிய விரைவில் அது நடக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : Kiruthiga Udhayanidhi: யார்னு தெரியாதவங்க வீட்டுக் கதவையெல்லாம் தட்டிருக்கேன்.. இதுக்காகத்தான்.. கிருத்திகா உதயநிதி ஷேரிங்ஸ்..!

மஞ்சுவாரியர் நடிகை மட்டுமின்றி பின்னணி பாடகியும் ஆவார். மேலும், அவர் முறைப்படி கிளாசிக்கல் நடனமும் கற்றுத்தேர்ந்தவர். பன்முகத் திறனை கொண்ட மஞ்சுவாரியர் தன்னுடைய 17 வயதிலே “சாட்சி”யில் அறிமுகமானார். மஞ்சுவாரியர் மலையாள திரையுலகின் உச்சத்தில் இருந்தபோது மலையாள சூப்பர் ஸ்டாரான திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திலீப் – மஞ்சுவாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். 2015ம் ஆண்டு நடிகர் திலீப்பை மஞ்சுவாரியர் விவாகரத்து செய்தார். பின்னர், நடிகர் திலீப் காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார். விவகாரத்திற்கு பிறகு மலையாளத்தில் ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படம் மூலமாக மீண்டும் மஞ்சுவாரியர் ரீ எண்ட்ரீ அளித்தார். அதன்பின்பு, லூசிபரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கனமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருவதையே மஞ்சுவாரியர் தற்போது விரும்புகிறார்.

மேலும் படிக்க : ஹிந்தியில் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இன்ஸ்டாகிராமில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

மேலும் படிக்க : Yash Toofan Song : குறுக்குல யாரும் போயிராதீங்க சார்.. கே.ஜி.எஃப் 2 ட்ரெய்லர் தேதியோடு வெளியானது தூஃபான் பாடல்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement