நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட்(Beast) திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. 

Continues below advertisement


இந்தநிலையில், தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' இந்த வாரம் சென்சார் செய்யப்படும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு, இறுதிப் பகுதியை சென்சாருக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. டார்க் காமெடி ஆக்‌ஷன் நாடகம் அடுத்த இரண்டு நாட்களில் சென்சாரை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சென்சார் குறித்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்று தெரியவந்துள்ளது. 






மேலும், பீஸ்ட் படத்திற்கு 'யு' அல்லது 'யு/ஏ' பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்சார் முடிந்ததும் 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் தேதி சிறப்பு போஸ்டருடன் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் பீஸ்ட் படத்திற்கு சென்சார் போர்டு சென்சார் வழங்கியதாகவும், அது தவறான பதிவு என்றும் தகவல் பரவியது. இதையடுத்து, இதை அறிந்துக்கொள்ள நினைத்த விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து சென்சார் போர்ட்டின் இணையத்தள பக்கத்திற்கு சென்று பீஸ்ட் படத்தின் சென்சார்(Beast Censor) என்ன என்பது குறித்து தேடியுள்ளனர். 


வரிசையாக விஜய் ரசிகர்கள் சென்சார் போர்ட்டின் இணையத்தள பக்கத்திற்கு படையெடுத்ததால் அந்த இணையத்தள பக்கம் முடங்கியதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் தற்போது ட்விட்டர் பக்கத்தில் சென்சார் போர்ட்டின் இணையத்தள முடங்கியதாகவும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Jayalalithaa Death Case: ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது ? - வாக்குமூலம் கொடுத்த ஓபிஎஸ்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண