பொன்னியின் செல்வன் சக்ஸஸ் பார்ட்டியில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்.! அடித்து துவைத்து வெளியே அனுப்பிய சம்பவம்!

'பொன்னியின் செல்வன்' படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து நடந்த சக்சஸ் பார்ட்டியானது சண்டையில் முடிந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ரவி மோகன், த்ரிஷா, நந்தினி, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா துலிபாலா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். வரலாற்று கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.

Continues below advertisement

அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு அதிக வசூல் குவித்த தமிழ் படங்களில் இந்தப் படமும் ஒன்று. இந்தப் படம் சிறந்த திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒலி வடிவமைப்பு என்று 4 பிரிவுகளுக்கான தேசிய விருதை இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது. 


இதுமட்டுமின்றி தென்னிந்திய பிலிம்பேர் விருது, சைமா விருது, நார்வே தமிழ் திரைப்பட விருது, கேரளா திரைப்ப விமர்சகர்கள் விருது என்று பல விருதுகளை இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது. 

இதன் காரணமாக இந்தப் படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், பொன்னியில் செல்வன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் கலந்து கொள்ள இந்த படத்தை தயரித்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குநர், மணிரத்னம், வடிவேலு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


அப்படி இத்தனை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த சக்சஸ் பார்ட்டியானது அடிதடியில் முடிந்ததாக பிரபல பத்திரிகையாளர் சமீபத்தில் கூறியுளளார். அதில், மணிரத்தினத்தின் பெண் உதவி இயக்குநர் மீது லைகா நிறுவனத்தைச் சேர்ந்தவர் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டாராம்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அடித்து துவைத்து வெளியில் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் சக்சஸ் பார்ட்டிக்கு வந்த பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலேயும், லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் இச்சவம்பத்தால் ரொம்பவே அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

 

Continues below advertisement