தக் லைஃப்

மணிரத்னம் இயக்கி கமல் , சிம்பு , த்ரிஷா நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் படத்தின் முதல் பாதி விமர்சனம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் தக் லைஃப் படத்தைப் பற்றி என்ன சொல்லி வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம் 

தக் லைஃப் விமர்சனம் 

தக் லைஃப் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக கதை நகர்ந்தாலும் கதாபாத்திரங்கள் எழுதப் பட்டிருக்கும் விதம் சிறப்பாக இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருப்பதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இடைவேளைக் காட்சி சிறப்பாக அமைந்துள்ளதாக மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். 

படத்தின் டிரைலரில் வருவது தான் முழு கதையாகவும் உள்ளது. மிகப்பெரிய கேங்ஸ்டரான ரங்கராய சக்திவேல் (கமல்) மற்றும் அவரது மகன் அமரன் (சிம்பு) இடையிலான அதிகாரத்திற்கான போட்டியே தக் லைஃப் படத்தின் கதை. ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அதிரடியும் விறுவிறுப்பும் கலந்த காட்சிகளை வைக்காமல் கதையை மெல்ல நிதானமாக சொல்கிறார் இயக்குநர் மணிரத்னம். கமல் மற்றும் சிம்புவின் நடிப்பு , இவர்களுக்கு இடையிலான தந்தை மகன் உறவு , மோதல் ஆகிய காட்சிகள் சிறப்பாக உருவாக்கியிருப்பதாக மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்