‘பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் எடுப்பார் என்று சுஜாதா எழுதியிருந்த புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சுஜாதா எழுதியிருக்கும் அந்த புத்தகத்தில், “ கல்கியின் பொன்னியின் செல்வன் இரண்டாயிரம் பக்கம் ஐந்து பாகம் உள்ளது. அதை இரண்டரை மணி நேர திரைப்படமாக பலர் முயற்சி செய்து கைவிட்டிருக்கிறார்கள். ஜவ்வு போல மெகா சீரியலாக மாற்றுவது எளிது. சவால், இரண்டரை மணி நேர திரைப்படமாக்குவதில்தான்.


பொன்னியின் நாவலை...  மூன்று நாவலைத் திரைப்படமாக்கினால் எல்லோரையும் திருப்திப்படுத்துவது மிகமிகக் கடினம். மணிரத்னம், ஏறக்குறைய அதை நிறைவேற்றுமாறு திரைக்கதை செய்து வைத்திருக்கிறார். எப்போதாவது அதைப் படமெடுப்பார் என்ற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்று  குறிப்பிடப்படப்பட்டிருக்கிறது. இந்தப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் அன்றே கணித்தார், சுஜாதா என்று பதிவிட்டு வருகின்றனர். 





பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிற திரைப்படம் பொன்னியின் செல்வன் - பாகம் 1. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படத்திற்கு மணியின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.  


 






இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது..உடல்நலக்குறைவால் விக்ரம் நிகழ்ச்சியில் பங்கேற்காத நிலையில், கார்த்தி,விக்ரம் பிரபு, த்ரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்னம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.