உலகளவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள திரைப்படம் ஸ்பைடர் மேன். எத்தனை பார்ட்டுகள் வந்தாலும் சலிக்காமல் படம் பார்க்கும் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் எல்லா நாட்டிலேயுமே உண்டு. அந்த வகையில்தான் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியானது Spider-Man : No Way Home திரைப்படம். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான இந்த திரைப்படம் தமிழகம் உள்ளிடட் இந்திய மாநிலங்களில் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்கப்பட்டது. 


உச்ச நடிகர்கள் படங்கள் ரிலீஸ் போன அதிகாலை ஷோவெல்லாம் திரையிடப்பட்டது. இப்படி வெறித்தனமான ரசிகர்களை சம்பாரித்துள்ள ஸ்பைடர் மேனை தியேட்டரில் சென்று பார்த்தே ஒரு இளைஞர் உலகசாதனை படைத்துள்ளார்.தியேட்டரில் படம் பார்ப்பதில் என்ன உலகசாதனை என்றா கேட்கிறீர்கள்? இவர் ஒருமுறை இருமுறை அல்ல, மொத்தமாக 292 முறை ஸ்பைடன் மேன் படத்தை பார்த்துள்ளார். ராமிரோ லானிஸ் என்ற இளைஞர் இந்த தியேட்டர் சாதனையை செய்துள்ளார். ஆகமொத்தம் இவர் படம் பார்க்க மட்டும் எடுத்துகொண்ட நேரம் 43216 நிமிடங்கள்.அதாவது 720 மணி நேரங்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 30 நாட்கள். 


 






அடடேய் என ராமிரோவை இணையவாசிகள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இவரைப்பற்றி பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை அமெரிக்காவில் இந்திய ரூபாய்க்கு ரூ. 730 எனக் கொண்டாலும், டிக்கெட் விலைக்கு மட்டுமே இவர் 2.27 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்துள்ளார் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.


முன்னதாக ஸ்பைடர் மேன் ரிலீஸ் ஆகி வசூலையும் வாரிக்குவித்தது. அந்தத் தகவல்களின் படி, Spider-Man : No Way Home படம் இந்தியாவில் மட்டும் முதல் 4 நாட்களில் மட்டும் 108. 37 கோடி வசூலித்துள்ளது. இந்த ரெக்கார்டின் படி இந்தியாவில் வெளியாகி வார இறுதி நாட்களில் அதிகம் வசுலித்த ஹாலிவுட் படங்களில் Spider-Man :No Way Home படம் இராண்டாவது இடத்தை பிடித்தது.






உலக அளவில் முதல் 4 நாளில் 138. 55  கோடி வசூலித்துள்ள Spider-Man : No Way Home உலக அளவில் வார இறுதி நாட்களில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் 5 வது இடத்தை பிடித்தது.  அதேபோல, ட்ரெய்லர் யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் 355.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. டாம் ஹாலண்ட், பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜெண்டயா, பீட்டர் பார்க்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படம்  மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.