தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான 'மகாராஜா' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர் நடிகை மம்தா மோகன்தாஸ். சிவப்பதிகாரம், குரு, குசேலன், எனிமி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


நடிகை மற்றும் பின்னணி பாடகியாக இருக்கும் மம்தா மோகன்தாஸ் ஒரு சில காலங்கள் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்ட பிறகு தற்போது மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். 



 


'மகாராஜா' படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் தன்னுடைய புற்றுநோய் பாதிப்பு குறித்தும் அதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பது குறித்தும் பகிர்ந்து இருந்தார். "வாழ்க்கையில் நீங்கள் என்னென்ன தடைகளை கடந்து வருகிறீர்களோ அவை தான் உங்களை, அனைத்து விதமான தடங்கலில் இருந்து மீண்டு வர உங்களுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.


இதுவரைக்கும் ஒரு தடவை கூட நான் கேன்சரால இறந்து போயிடுவேன் என்று நினைத்ததே கிடையாது. ஏரோபிளேனில் இருந்து குதிக்கும் போது என்னுடைய பாராஷூட் பறக்காமல் போனதால நான் கீழே விழுந்து விடுகிறேன். இப்படி ஒரு அட்வென்ச்சர் பண்ணி அப்போ என்னோட உயிர் போச்சுன்னா அது சந்தோஷமான இறப்புதானே அதுனால எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. அந்த மாதிரி ஒரு எண்ணத்தை மனதில் கொண்டு வரும்போது வாழ்க்கை ரொம்ப ஈஸியா போயிடும்.  




புற்றுநோய் பாதிப்பால் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். உடலில் உள்ள கேன்சர் கட்டி ஒரு இடத்துல இருந்து மற்ற இடங்களுக்கு ட்ராவல் பண்ணிட்டு போகுது. அதனால அதோட வேலையே அது பார்க்கும் போது என்னோட வேலையை நான் பார்க்கணும் என நான் மீண்டும் நடிக்க வந்துவிட்டேன் என்றார் மம்தா மோகன்தாஸ். 


விருமாண்டி, வானவில், சமுத்திரம்,  மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்த நடிகை அபிராமி பல காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நிலையில் இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.