மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற முடிவில் தான் இருக்கிறார் போல. கடந்த ஆண்டு ஒரே வருடத்தில் மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்தார். மூன்று படங்களிலும் வெவ்வேறு விதமான படங்கள் நண்பகல் நேரத்து மயக்கம் நம் பொறுமையை கேட்கும் வகையிலான ஒரு படம் .மறுபக்கம் கொஞ்சம் விறுவிறுப்பான ஒரு படம் கன்னூர் ஸ்குவாட் , காதல் தி கோர் படம் அதன் மிகவும் முக்கியமான ஒரு சமூக விவாதத்தை முன்னெடுத்திருக்கிறது. இந்த ஆண்டு வெளியான பிரமயுகம் மம்மூட்டியின் சினிமா பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்கள். இப்படி தொடர்சியாக வெரைட்டியான படங்களை தேர்வு செய்துவருகிறார் மம்மூட்டி. அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள படம் டர்போ.
டர்போ
வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள படம் டர்போ. ஆக்ஷன் மற்றும் காமெடி ஆகிய இரு ஜானரும் சேர்த்து எடுக்கப் பட்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டும் ரோட்டில் சண்டைப் போட்டுக்கொண்டும் போலீஸ் சஸ்டேஷனில் முட்டி போட்டு உட்கார்ந்து 25 வயது இளைஞன் செய்ய வேண்டிய சேட்டைகளை எல்லாம் படத்தில் செய்திருக்கிறார் மம்மூட்டி.