மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி திரைத்துறையினர் மீதான போதைப் பழக்கம் குறித்த தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டை ஒரு சாரார் கருத்து என சாடியுள்ளார்.


மம்முட்டி நடிப்பில் வெளியாகவிருக்கும் சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'ரோர்ஸ்சார்ச்'. இந்த திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின்போது, பிரபல மலையாள செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மேல் வைத்த போதை பழக்க குற்றச்சாட்டை எதிர்த்து பேசியுள்ளார். 


அது குறித்து பேசிய அவர்,  “நடிகர்கள் மட்டும் இங்கு போதைப் பொருட்கள் உபயோகிப்பதில்லை. அது ஒரு சமூக பிரச்சனை. ஒட்டுமொத்தமாக அதை ஒரு சமூகப் பிரச்சனையாக பார்த்தால் தான், அதை ஒழிக்க முடியும். உயிர் பறிக்கும் மற்றும் வாழ்வையே சீரழிக்கும் போதை பொருட்கள் அனைவருக்கும் எளிய வகையில் கிடைக்கும் முறையில் உள்ள நிலையில், போதைப் பொருட்களை உபயோகிக்க கூடாது என்று பதாகை ஏந்துவதை தவிர ஒருவரால் வேறு என்ன செய்து விட முடியும் 




மேலும் மதுக்கடைகள் திறந்து இருக்கையில் போதை ஒழிப்பு பிரச்சாரங்களின் செயல்திறன் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து பேசுகையில் யாரும் ஒரு சாரார் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. போதை பழக்கத்தை குறிப்பிடுகையில் அது ஒரு சமூகப் பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார். 




இதற்கு முன் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பஷியின் தற்காலிக தடை குறித்து அவர் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகர் ஸ்ரீநாத் பஷி 'சத்தம்பி' திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது பிரபல மலையாள தொகுப்பாளினியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு தற்காலிக தடை விதிக்க திரை சங்கத்தினர் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாக இருந்த நிலையில், மம்முட்டி அது குறித்து கேள்வி எழுப்பினார்.


ஒருவரது வேலையில் இருந்து அவரை தடுப்பது தவறு. யாருடைய பொழப்பிலும் நாம் கை வைக்க கூடாது என்று கூறினார். மேலும் பஷியின் மேல் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாகவும், ஆனால் சங்கம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறினார். மம்மூட்டி 'பீஸ்மபர்வம்' திரைப்படத்தில் பஷியுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 






மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் நிஜம் பசீர் இயக்கத்தில் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'ரோசார்ச்'. சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படமான இந்த திரைப்படத்தை கிரேஸ் ஆன்டனி, ஷஃபாருதீன், ஜெகதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த திரைப்படத்தை மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான 'வேஃபேரர் பிலிம்ஸ்' தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.