மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


மாமன்னன்:


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ளது.


இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் ரிவியூவ்களை அதிகமாக பெற்று வரும் நிலையில் ,இன்று இத்திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


படத்தின் வசூல்


மாமன்னன் படத்தின் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாள் மாமன்னன் திரைப்படம் இந்தியா முழுவதும் ரூ.5.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இரண்டாவது நாளான நேற்று ரூ.4 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியானது.  பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி இரண்டு நாட்களில் இத்திரைப்படம் ரூ.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாமன்னன் திரைப்படம் சுமார் ரூ.35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் படம் கூடுதல் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஆராய வேண்டியது மக்கள் தான்


இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படம் குறித்து  அளித்த பேட்டியில் பேசும் போது படத்தில் என்ன இருக்கிறது என ஆராய வேண்டியது மக்கள் தான் என தெரிவித்தார். அவர் பேசியதாவது:”நாங்கள் படத்தை  கொடுத்து விட்டோம். படத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டியது மக்கள்தான். அதில் இருக்கும் விஷயங்களுக்கு மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தயவு செய்து படத்தை சின்ன விஷயத்திற்குள் அடைத்து விடாதீர்கள். இந்தப்படத்தை எடுக்கவே முடியாதோ என்று நினைத்தேன். ஆனால் இந்தப்படத்தை பெரிய திரைப்படமாக எடுப்பதற்கும், அதனை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் நான் கேட்டது எல்லாவற்றையும் உதயநிதி ஸ்டாலின் செய்து கொடுத்தார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க


Gemini Bridge: சென்னையின் முக்கிய அடையாளம்... இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெமினி ப்ரிட்ஜ்.. சுவாரஸ்யங்கள் இதோ..


TNPSC: குஷியில் தேர்வாளர்கள்..! அதிரடியாக உயர்த்தப்பட்ட குரூப்-4 பணியிடங்கள்.. புதிய பட்டியலை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!