மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன், திரைப்பட விமர்சனம் குறித்தும் விமர்சகர்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த விளக்கம் ஒன்றை அவர் தெரிவித்துள்ளார்.






இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ''நான் அந்த நேர்காணலில், திரைப்பட தயாரிப்பு செயல்முறையை நன்கு புரிந்து கொள்வது திரைப்பட விமர்சனத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதைப் பற்றி நான் பேசியிருந்தேன். அதற்கு உதய தாரா நாயர் போன்ற சிறந்த விமர்சகர்களையும் உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தேன்.


பார்வையாளர்களே மிக சுவாரசியமான விமர்சனங்களை எழுதும் காலம் இது, ஆக தொழில்முறை விமர்சகர்கள் இன்னும் உயர்ந்த இலக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்பதைத்தான் நான் சொன்னேன். மேலும் எப்போதும் ரசிகர்களின் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை மதிக்கக் கூடியவள் நான். மேலும் அவர்களுக்கு ஒரு திரைப்படத்தை பார்க்கவும், நல்லதோ கெட்டதோ அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் எப்போதும் உரிமை உண்டு என நான் நம்புகிறேன்"  என்று இயக்குநர் அஞ்சலி மேனன் தெரிவித்துள்ளார்.




முன்னதாக, பிரபல மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன். இவர் பெங்களூர் டேஸ், கூடே, உஸ்தட் ஹோட்டல் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வொண்டர் வுமன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகைகள் பார்வதி நித்யா மேனன், அமிர்தா சுபாஷ் பத்மப்ரியா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வொண்டர் வுமன் திரைப்படம் இன்று சோனி லைவில் வெளியானது. 


 






இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், திரைப்பட விமர்சனம் குறித்தும் விமர்சகர்கள் குறித்தும் விமர்சித்திருந்தார். அப்போது அவர், “ஒரு விமர்சகர் சினிமா விமர்சனம் எழுதும் போது, அவருக்கு முதலில் ஒரு படம் எப்படி உருவாகிறது என்பது பற்றிய அடிப்படை புரிதல் வேண்டும். அவர்களது மேலாளர்கள் அவர்களிடம் திரைப்பட உருவாக்கம் குறித்து ராஜ்கபூரிடமும், எடிட்டிங் குறித்து ஹரிஷிகேஷ் முகர்ஜியிடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இந்த மாதிரி பிரபல நபர்களிடமிருந்து தான் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பல சினிமா விமர்சகர்களுக்கு ஒரு திரைப்படத்தை எப்படி விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதலே இல்லை.” என்று பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் தற்போது விளக்கமளித்துள்ளார்.