தங்க மீன்கள் , பேரன்பு மற்றும்  தரமணி ஆகிய படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ராம் , தற்பொழுது மலையாள முன்னணி ஹீரோவான நிவின் பாலியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பெண்கள் மனதில் முக்கிய இடம் பிடித்தவர் நிவின் பாலி. பின்பு ரிச்சி படத்திலும் நடித்தாலும், அது பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் கடந்த நான்கு ஆண்டுகள் எந்த தமிழ் படத்திலும் இவர் நடிக்கவில்லை. தற்போது தரமணி, பேரன்பு இயக்கிய ராம் அவர்களின் படத்தில் ரீ- எண்ட்ரி கொடுக்கத் தயாராக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.