பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

Continues below advertisement

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று  பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் பலர் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதமர்மோடியின் சித்தி நர்மதாபென் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நியூ ரணிப் பகுதியில் தனது பிள்ளைகளுடன் நர்மதாபென் வசித்த வந்தார். இவர்,பிரதமர் மோடியின் தந்தையின் சகோதாரர் ஜக்ஜீவன் தாஸின் மனைவி ஆவார். இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலத் மோடி கூறினார்.



Continues below advertisement