மோகன்லால்
நடிகர் மோகன்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள பரோஸ் 3D திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இபப்டத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் மோகன்லால் கலந்துகொண்டார். இதில் தனது திரையுலக வாழ்க்கையைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். அப்போது சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தைப் பற்றி மோகன்லால் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
லப்பர் பந்து படத்தை பாராட்டிய மோகன்லால்
ஏன் மலையாளத்தில் வரும் படங்களைப் போல் தமிழ் படங்கள் இருப்பதில்லை என்கிற குற்றசாட்டு பொதுவாக தமிழ் ரசிகர்களால் வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இறுதிவரை மலையாள சினிமாக்களே ரசிகர்களிடம் ஆதிக்கம் செலுத்து வருகின்றன. பிரேமலு , பிரம்மயுகம் , ஆவேஷம் , மஞ்சுமெல் பாய்ஸ் , கிஸ்கிண்தா காணம் , உள்ளொழுக்கு என மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி பட ரசிகர்களையும் கவர்ந்துள்ளன. இது தொடர்பாக மோகன்லாலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இப்படி கூறினார்
" தமிழில் நிறைய அருமையான படங்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிக சின்ன சின்ன விஷயங்களை வைத்து அருமையாக எடுக்கப்பட்ட ஒரு படம்" என்று மோகன்லால் தெரிவித்தார்.
தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ், சஞ்சனா , காலி வெங்கட் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான லப்பர் பந்து திரைப்படம் சாதிய அரசியலையும் உள்ளடக்கியது. காதல் , விளையாட்டு , காமெடி என எல்லா விதமான உணர்வுகளையும் இப்படம் கையாண்டிருந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் வரவேற்பைப் பெற்றதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
மேலும் படிக்க : நீதி என்கிற பேரில் வன்முறையை விதைக்கும் அட்லீ... பேபி ஜான் படத்தின் காட்சியால் சர்ச்சை
தெறி இந்தி டப்பிங் பாத்திரலாம்... மறுபடியும் அட்லீ வேலையை காடிட்டாரு..பேபி ஜான் விமர்சனம்