தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோஜ் கே.ஜெயன். இவர் தமிழில் தளபதி, தூள், திருமலை , திருப்பாச்சி, வில்லு , திமிரு, பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஊர்வசியின்முன்னாள் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கேரள மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை மூன்று முறை பெற்றிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.
இந்த நிலையில் இவரின் நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் குணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் மனோஜ் கே.ஜெயன் . “ஷங்கர் சார் செட்டுல பெரிய படம் பண்ணுறாரு ரஜினிசார். என்னை போய் ரஜினி சாரை பார்க்க சொன்னாங்க. நான் தளபதி சமயத்துல இரண்டு சீன் பண்ணியிருக்கேன் அவர் கூட, என்னை நியாபகம் கூட இருக்காது அவருக்கு. என்னை போய் பார்க்க சொல்லிக்கிட்டே இருந்தாங்க என் டிரைவர். எனக்கு ஒரே தயக்கமா இருந்துச்சு. ஒருவழியா போனேன். பிரம்மாண்டமான செட், ஷங்கர் சார் படம் சொல்லவா வேண்டும். முதல்ல ஷங்கர் சார் இருந்தாரு. உடனே அவர் வாங்க சார், என்ன சார் இங்கன்னு கேட்டாரு. ரஜினி சாரை பார்க்கனும்னு சொன்னேன். உள்ளே இருக்காரு போய் பாருங்கன்னு சொன்னாரு. நான் ரொம்ப பதட்டமா போனேன். எப்படி ரியாக்ட் பண்ணுவாருனு ஒரு பயம். கதவை திறந்து பார்த்த பொழுது , விவேக் சார் , கனல் கண்ணன் மாஸ்டர் , ரஜினிகாந்த் சார் எல்லாம் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. நான் உள்ளே போனதும் ரஜினிசார் என்னை நேரடியா பார்த்தாரு. நான் இரண்டு அடி வைக்கும் பொழுதே ரஜினிசார் எழுந்து , சார் வணக்கம்...என்றார். சார் என்னை நியாபகம் இருக்கா சார் என்றதும், என்ன சார் நாம மைசூர்ல தளபதி பண்ணோமே மறக்க முடியுமா என்றார். தூள் படம் பார்த்தேன் நல்லா பண்ணியிருக்கீங்க அப்படினு சொன்னாரு. அதுவே எனக்கு ஆஸ்கர் கிடைத்த மாதிரி. நான் கதவை திறந்து இரண்டு அடி எடுத்து வைக்கும்போதே ரஜினி எழுந்து கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொன்னார். அவர் ஸ்பீடு வராது. அவர் அத பண்ணனும்னு அவசியமே இல்ல. நான் பக்கத்துல போனதுக்கு அப்புறம்கூட அவர் எழுந்திருக்கலாம். ஆனால் என்னை பார்த்ததுமே எழுந்தார். அவ்ளோ நல்ல மனிதர்“ என பெருமிதமாக தெரிவித்தார் மனோஜ் கே.விஜயன்