மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளார் பகத் பாசில். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மாஸ் நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் இவரது தந்தை பாசில்  இயக்கிய 'கையெத்தும் தூரத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பகத் பாசில். பின்னர், பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.


சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இவர் தன் உடல்மொழி, கண் அசைவு போன்ற ஒவ்வொறு மொமண்டிலும் நடிப்பில் அசத்தி இருந்தார். பகத் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் பகத் பாசில் அவர்களது திருமண நாளையொட்டி  'land rover defender 90' என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. 


ரஜினியின் 170-வது திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க இருக்கிறார். லைகா நிறுவன தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிகர் பகத் பாசில் இணைய உள்ளாராம். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளது.  தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


ரஜினியின் 170-வது திரைப்படத்தில் பகத் பாசில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.  ரஜினியுடன் பட வாய்ப்பு கிடைத்ததும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி இருக்கிறாராம் பகத். ஹீரோவுக்கு தனி, வில்லனுக்கு தனி என கேட்டகிரி பிரித்து சம்பளம் வாங்கி வருகிறாராம் இவர். அதுவும் இவர் ஹீரோ கதாப்பாத்திரத்தைக் காட்டிலும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு தான் அதிகமாக சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. 


ஹீரோவாக நடிக்க ஒரு திரைப்படத்திற்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கும் பகத், அதுவே வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் ரூ.8 கோடி வரை  சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினியின் தலைவர் 170 படத்துக்காக அவருக்கு ரூ.8 கோடி  சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த பின் பகத் பாசிலின் மவுசு இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க


EPS Filed Caveat Petition :ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு கருத்தை கேளுங்கள்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ்!


CM Stalin: ”I.N.D.I.A கூட்டணிக்கு விளம்பரதாரரே மோடிதான்; கவுண்டவுன் ஸ்டார்ட்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு