மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பேபி அம்பிலி தான் நடிக்க வந்த கதையை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இவர் மின்னாரம், மிதுனம், வாத்சல்யம், மீனத்தில் தாலிகேட், இரண்டாம் பாவம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் நடிக்க வந்த கதையை தெரிவித்துள்ளார். அதில், “நான் நடிக்க வந்ததே அதிர்ஷ்டம் என சொல்லலாம். காரணம் என் குடும்பத்தில் உறுப்பினர்கள் யாரும் சினிமாத்துறையில் இல்லை. அதேசமயம் என் தந்தைக்கு நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் அவர் நாடக குழுவில் பணியாற்றி வந்தார். அதை தவிர்த்து திரையுலகில் நான் வர எந்த காரணமும் இருந்தது இல்லை. 


நான் இரண்டரை வயதாக இருக்கும் போது நான் அங்கன்வாடிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது குழந்தைகள் வேண்டும் என்றால் நேராக அங்கு வந்து அழைத்து செல்வார்கள். என் அம்மா, அப்பா வேலைக்கு சென்று கொண்டிருந்ததால் அவர்கள் வரும் வரை நான் ஆசிரியையுடன் தான் இருப்பேன், அந்த ஆசிரியை பெயர் ஷீலா. அவருக்கு கலையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வகுப்பில் ஆடியும் பாடியும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 






நல்காவல் என்ற படத்துக்காக என்னை ஆசிரியை அழைத்துச் சென்றார். இது என் வீட்டில் இருப்பவருக்கு கூட தெரியாது. நான் அந்த படத்தின் ஹீரோவின் மடியில் இருப்பது போன்ற காட்சி எடுத்தார்கள். நான் மடியில் அழாமல் இருந்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. மீனத்தில் தாலிகேட் படத்தில் நடித்த அம்பிலி கேரக்டர் அனைவரிடத்திலும் நன்கு பிரபலமானது. இன்று வரை ஆசிரியை ஷீலாவுக்கும் எனக்கும் நல்ல உறவானது தொடர்ந்து வருகிறது. 




மேலும் படிக்க: 15 Years Of Ayan : ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சரியம்...கே.வி.ஆனந்தின் மாஸ்டர்பீஸ்...15 ஆண்டுகளை கடந்த அயன்