தமிழ்நாடு:



  • தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர்; சீனா, இந்தியாவை எதிர்க்க துணிச்சல் இல்லை- கச்சத்தீவை பற்றி மோடி பேசலாமா? நாடகம் போடுவதும் இன்னும் சில நாட்களுக்குத்தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

  • நாம் போடும் ஓட்டுதான் மோடிக்கு போடும் வேட்டு; மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது - பள்ளிக்கல்வித்துறை தகவல்

  • கூட்டாட்சி என கூறும் மோடி காட்டாச்சி நடத்துகிறார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.

  • அரசியல் ஆதாயத்துக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி.

  • ஊழல் செய்யவே தேர்தல் பத்திரங்களை பாஜக கொண்டு வந்தது - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு.

  • கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பாஜக தலைவர் பேசுகின்றனர் - ப.சிதம்பரம்.

  • போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீரிடம் 11 மணிநேரம் நடத்திய விசாரணை நிறைவு.

  • கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

  • வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இன்று வழக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை ஆய்வு மையம். 


இந்தியா: 



  • ஆந்திராவில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவித்தது காங்கிரஸ் கட்சி.

  • திகார் சிறையில் கெஜ்ரிவால் அறைக்கும் அருகே அடுத்தடுத்து தாதாக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • மாநிலங்களவை எம்.பியாக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

  • வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

  • காஷ்மீர்: அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத் போட்டி.

  • திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.

  • பாஜகவில் சேருமாறு தன்னை மிரட்டியதாக டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு.

  • ரயில் நிலையங்களில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்தது ரயில்வே

  • ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் உட்பட 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு. 


உலகம்: 



  • மனைவிக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு.

  • கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்.

  • துருக்கி: இஸ்தான்புல் நகரில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் உயிரிழப்பு.

  • சிரியாவில் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு.

  • இஸ்ரேல் தாக்குதலில் 7 ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டது தற்செயலானது - நெதன்யாகு.

  • தமிழ்நாட்டை பின்பற்றி கனடா நாட்டிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்.

  • பின்லாந்து நாட்டில் 12 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உயிரிழப்பு.

  • காசாவில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 7 பேர் உயிரிழப்பு. 


விளையாட்டு: 



  • செஸ்: பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய சாம்பியன் பீட்டர் ஸ்விட்லர் நியமனம்.

  • ஐபிஎல் 2024: கொல்கத்தா - டெல்லி இன்று மோதல்.

  • ஐபிஎல் 2024: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது லக்னோ அணி.

  • 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியா பயணம்