மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வரும் கே.யூ. மோகனனின் மகள் மாளவிகா மோகனன். இவர் 2013ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர், கன்னடத்தில் நானு மாட்டு வரலக்ஷ்மி என்ற படத்தில் நடித்து கன்னடத்திலும் நடித்தார். தமிழில் பேட்ட மூலம் அறிமுகமானார்


நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தாலும், மாஸ்டர் படம் மூலமாக அவர் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தனுஷிற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.






நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் அவர் தனது போட்டோஷூட்டின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தேவதை போல் வெள்ளை நிற ஆடையில் இருக்கும் அவரின் புகைப்படங்கள் வைரலாகிறது.






தற்போது மாளவிகா மோகனன் இந்தியில் உருவாகும் யுத்ரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் சதுர்வேதி நடித்து வருகிறார். ரவி உத்யவார் இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன் விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை ஏற்கனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.