'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நாடு'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த விவரத்தை தற்போது வெளியிட்டள்ளனர் படக்குழுவினர். 


 



 


கேக் வெட்டி கொண்டாடிய 'நாடு' படக்குழுவினர் :


ஸ்ரீ ஆர்க் மீடியா நிறுவனத்தின் சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இணைந்து தயாரித்துள்ள 'நாடு' திரைப்படத்தை இயக்கியுள்ளார் 'எங்கேயும் எப்போதும்' என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய எம். சரவணன். பிக் பாஸ் புகழ் தர்ஷன் ஹீரோவாகவும் நடிகை மஹிமா நம்பியார் ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடினர் படக்குழுவினர். அவர்களின் அந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. 


 







ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவது யார் ?


படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். நவம்பர் 11ஆம் தேதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார் எனும் தகவலை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.  நடிகர் ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடித்திருந்த  'எங்கேயும் எப்போதும்' என்ற ஒரு அருமையான படைப்பை கொடுத்த எம் சரவணனின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






 


ஒரு விபத்து நடைபெறுவதால் அதில் எத்தனை உயிர்கள் சிதைந்து போகின்றன என்பதை வலியோடு நம்மை அந்த விபத்தின் அருகாமையில் கொண்டு நிறுத்திய ஒரு அற்புதமான இயக்குனரின் மற்றோரு படைப்பு 'நாடு' திரைப்படம் என்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்படத்திலும் இயக்குனரின் மெசேஜ் நிச்சயமாக இருக்கும். 


நடிகர் தர்ஷன் இதற்கு முன்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் சரவணன் மற்றும் சபரி இயக்கத்தில் வெளியான 'கூகுள் குட்டப்பன்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லொஸ்லியா நடித்திருந்தார்.