தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் மிகவும் அர்பணிப்பு உணர்வுடன் நடிக்கும் சிலர் நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் தனது மகனுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகான் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு , அறிவிப்பு வெளியானது முதலே ஹைப்பில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்தான் மகான் படத்தின் புதிய பாடல் அமைந்துள்ளது என்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள்.
“சூறையாட வாடா சுத்தி அள்ளி தந்துடு சூரா” என தொடங்கும் அந்த பாடலில் தோன்றும் விக்ரம் , பார்க்கும் ரசிகர்களுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த தவரவில்லை. கிராமிய கலைஞர்களை வைத்து, மிரட்டலாக பாடலை உருவாக்கியுள்ளார் இயக்குநர். பாடலில் கலைஞர்களுடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மெய் மறந்து ஆடும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன. இந்த பாடலை வி.எம். மகாலி்ங்கமுடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். சந்தோஷ் நாராயணன் ஹிட் வரிசையில் நிச்சயம் சூறையாட வாடா படல் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
படத்தில் மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வானி போஜன் என பெரிய பட்டாளமே இணைந்துள்ளது.. படத்தில் விகரம் நெகட்டிவ் சாயலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. துருவ் விக்ரம் சைனாவின் பாரம்பரிய தற்காப்பு கலைகளை அறிந்த ஒரு காவல்துறை அதிகாரியாக வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது. விக்ரமின் 60 வது படமாக உருவாகி வரும் மகான் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் காத்திருக்காம்.. இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது நினைவுகூறத்தக்கது.
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?
மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?