பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது  விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோரை வைத்து மகான் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரமும் அவருடைய மகன் துருவ்வும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.






மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மகான்' திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






இதற்கிடையே மகான் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எவண்டா எனக்கு கஸ்டடி என்ற சிங்கிள் பாடல் இன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை மகான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது.


 



சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடலை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண