நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக  உள்ள கோப்ரா திரைப்படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான  ஆகஸ்ட் 31ஆம் தேதி ( புதன் கிழமை) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை  ‘டிமாண்டி காலணி’  ‘இமைக்கா நொடிகள்’ படங்களை எடுத்த  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 


 






இந்தநிலையில் இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செலவில், பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


முன்னதாக கோப்ரா படம் குறித்து பேசிய விக்ரம் “ அந்நியன் மற்றும் 2.O, இருமுகன் ஆகிய படங்களின் கலவையாக  ‘கோப்ரா’ படம் இருக்கும்.  எனக்கு நடிப்பு, சினிமாதான் உயிர்” என்றார். 


டென்ஷனாக இருக்கும் போது ரசிகர்கள் தொல்லை செய்யும் போது எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற கேட்ட போது, “ நிச்சயமாக இல்லை. இதற்காகத்தான் நாங்கள் ஏங்குகிறோம். ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கடவுள் கொடுத்த வரம். என்னைப்பொறுத்த வரை அவர்கள்தான் எனக்கு கடவுள்.” என்றார்.


 






நீங்கள் நிறைய கஷ்டங்களை சந்தித்து உள்ளீர்கள்.. அதையெல்லாம் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள்.. ஆனால் இப்போதைய இளைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை செய்து கொள்கிறார்களே? 


இந்தத்தலைமுறை அப்படி ஆகிவிட்டது. படிப்பில் தயசு செய்து ஃப்ரஷ்ஷரை ஏற்றிக்கொள்ளாதீர்கள். கண்டிப்பாக ஒரு டிகிரி வாங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு ஒரு கனவு இருக்கும். அதை துரத்துங்கள். ஒவ்வொரு விழும் போதும் நாம் எழுந்திருக்க வேண்டும். என்னால் நடக்கவே முடியாது. ஆனால் நான் நடக்க ஆரம்பித்து நடிக்க ஆரம்பித்தேன்” என்று பேசினார்.