கோவையில் தனியார் உணவு டெலிவரி செயலியில் குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவர்களுக்கு ஆணுறை அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் உணவு டெலிவரி செயலி மூலம் தங்களுக்கு பிடித்த ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை பலர் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதற்காக ஆன்லைனில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றன. சில சமயங்களில் தவறுதலாக உணவுப் பொருட்களை கொடுப்பது என்பது நடப்பதும் உண்டு. ஆனால் கோவையில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறை அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை கணபதி பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது குழந்தைகளுக்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றை தனியார் உணவு டெலிவரி செயலியில் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான தொகை 207 ரூபாயை ஆன்லைனில் அவர் செலுத்தி உள்ளார். அதன் பின்னர் 30 நிமிடங்களில் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டிற்கு வந்து கொடுக்கப்படும் என அந்நிறுவனம் அவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது.


இதனைத் தொடர்ந்து அந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிற்கு வந்து ஒரு பார்சலை கொடுத்துச் சென்றுள்ளார். அதை வாங்கிய அவர் அதற்குள் இருக்கும் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்சை எடுத்து தனது குழந்தைகளுக்கு கொடுக்க அந்த பார்சலை பிரித்துப் பார்த்தார். அப்போது அதற்குள்  ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்க்கு பதிலாக இரண்டு பாக்கெட் ஆணுறைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஆர்டர் செய்த உணவு டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு  ஆர்டர் செய்ததை மாற்றி வேறு ஒன்றை அனுப்பியது குறித்து கேட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஒரு பதிவினை போட்டார்.


இதையடுத்து பார்சலை மாற்றி அனுப்பி வைத்து விட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அந்த உணவு டெலிவரி நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் ஆர்டர் செய்த பொருளுக்கு ஆன்லைன் மூலம் செலுத்திய தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் தெரிவித்தனர். அதற்கு பணம் திருப்பி அனுப்ப வேண்டாம், தான் ஆர்டர் செய்தவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்டர் செய்த பொருட்களை கவனித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வையுங்கள் என அவர் அறிவுரை கூறினார். ஆர்டர் செய்த ஐஸ்கிரீம்க்கு பதிலாக ஆணுறை அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண