TTF Vasan Bail: யூ டியூப் பிரபலமும், நடிகருமான TTF வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பைக் ரைடு மூலம் யூ-டியூபில் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், செப்டம்பர் 16ம் தேதி சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் TTF வாசன் பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 


புழல் சிறையில் அடைக்கப்பட்ட TTF வாசன் கடந்த மாதம் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமின் மனுவை முதன்மை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் TTF சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதில், விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் TTF வாசனின் செயல் இருப்பதாக கூறி TTF வாசனின் ஜாமினை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அதிகமாக சென்று விபத்தை ஏற்படுத்தும் TTF வாசனின் பைக்கை கொளுத்தி விட வேண்டும் என்றும், TTF வாசன் யூடியூப் தளத்தை மூடிவிட வேண்டும் என்றும்  நீதிமன்றம் கண்டனத்தை பதிவிட்டது. 


மேலும் TTF வாசனின் நீதிமன்ற காவல் நவம்பர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் புழல் சிறையில் இருந்த TTF வாசன் இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அது நீதிபதி சி.வி.கார்த்தியேகன்  முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி TTF வாசனிற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். TTF வாசன் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி, 3 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமின் மனு மீதான விசாரணையில், காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாததால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 


கைதாகி 40 நாட்களாக சிறையில் இருக்கும் TTF வாசன் ஜாமினில் வெளிவர உள்ளார். முன்னதாக TTF வாசன் கைதான போது, 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து காவல்துறை தரப்பில் உத்தரவிட்டுள்ளது. 


மேலும் படிக்க: LEO Success Meet LIVE: இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் லியோ சக்சஸ் மீட்.. உடனுக்குடன் அப்டேட்கள் உங்களுக்காக!


ரத்தத்தில் குளிக்கும் விக்ரம் என அசுரத்தனமாக வெளியான தங்கலான் டீசர்