ராஜநாகத்தை இரண்டாக பிச்சிப்போடும் விக்ரம், ரத்தம் ஓடும் ஆறு, ரத்தத்தில் குளிக்கும் விக்ரம் என அசுரத்தனமாக தங்கலான் டீசர் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement


பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி அசுரத்தனத்தில் மிரட்டலை காட்டியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடெக்‌ஷன் சார்பில் பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் தங்கலான். இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கி, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியாவாக உருவாகி இருக்கும் தங்கலாம் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. 


ரிலீசை ஒட்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராஜநாகத்தின் கழுத்தை திருப்பி அதை இரண்டு துண்டுகளாக பிரித்து எடுக்கிறார் விக்ரம், புழுதி பறக்கும் வறண்ட நிலத்தில் பழங்குடியின மக்களின் யுத்தமும், ரத்த ஆறும், மிரட்டலுமாக காட்சியளிக்கிறார் விக்ரம். 


ஜடா முடி, புழுதி என காட்சியளிக்கும் விக்ரம் மிரட்டலையே கொடுக்கிறார். மாளவிகா மோகனும் வித்யாசமான கெட்டப்பில் அலறவிடுகிறார். டீசருக்கு இடையே விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம் என்ற டீசர் பார்வையாளர்களை மிரள வைத்துள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையை கூறும் விதமாக தங்கலான் படம் எடுக்கப்பட்டுள்ளது. 



எப்பொழுதும் வித்யாசமான கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்து வரும் விக்ரம், தங்கலானில் முற்றிலுமாக வேறொரு கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார். இதேபோன்று, தனது படைப்புகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும், அவர்களது பிரச்சனைகளையும் தனது இயக்கத்தில் கூறி வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். அந்த வகையில் கோலார் தங்க சுரங்க தொழிலாளிகளான பழங்குடியின மக்களின் வாழ்க்கையை கூறும் படமாக தங்கலான் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


மேலும் படிக்க: LEO Success Meet LIVE: இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் லியோ சக்சஸ் மீட்.. உடனுக்குடன் அப்டேட்கள் உங்களுக்காக!


Leo Success Meet: ஸ்கெட்ச் ஆடியோ லாஞ்ச்சில் இல்லை; சக்சஸ் மீட்டில்! குட்டிக்கதையில் அரசியலுக்கு அச்சாரமிடுவாரா விஜய்?