தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படம் மூலம் புகழ்ப்பெற்றவர் நடிகர் மாதவன். அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே போல இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் மாதவன். இஸ் ராத் கி சுபாக் நகின்’ என்ற இந்தி படம்தான் மாதவனின் முதல் அறிமுகப்படம். தற்போது மும்பையில் வசித்து வரும் மாதவன் அவ்வபோது சென்னைக்கு வருவதும் வழக்கம். இந்த நிலையில் தனது மகனுக்காக மும்பையில் இருந்து துபாய்க்கு குடியேற இருக்கிறாராம் மாதவன். மாதவன் கடந்த 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார். பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் சினிமாவையே தேர்ந்தெடுப்பது வழக்கம். அதிலும் மாதவனுக்கு பாலிவுட் பக்கமும் மவுசு அதிகம். ஆனால் தனது மகனுக்கு இளம் வயதிலிருந்தே நீச்சலில் ஆர்வம் இருப்பதை அறிந்த மாதவன் அதனை ஊக்குவித்து வருகிறார். ஏற்கனவே நீச்சல் போட்டிகளில் பல பரிசுகளை தட்டிச்சென்ற வேதாந்த் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாராகி வருகிறாராம்.
மும்பையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையில் , தற்போது கொரோனா சூழல் காரணமாக முன்பையில் முக்கிய நீச்சல் குளங்கள் மூடப்பட்டுவிட்டனவாம். அதன் காரணமாக தனது மகனின் நீச்சல் பயிற்சி தடைப்படக்கூடாது என்பதற்காக தற்போது மும்பைக்கு சென்றுள்ளாராம் மாதவன். முன்னதாக தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட மாதவனின் மகன் வேதாந்த் வெற்றிப்பெற்று அசத்தினார். போட்டியில் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று நான்கு பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தார். அதனை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து பெருமையுடன் பதிவு செய்திருந்தார். தற்போது 16 வயதாகும் வேதாந்த் தனது 18 வது வயதில் தனது ஒலிம்பிக் கனவிற்குள் கால் பதிப்பார் என தெரிகிறது.