Bigg Boss 5 Tamil Day 78: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள கயிற்றை பிடித்து கொள்ள வேண்டும். கடைசி வரை அந்த கயிற்றை பிடித்திருக்கிறாரோ அவரே இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பிக் பாஸ் தெரிவித்திருக்கிறார். இதனால், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒரே கயிற்றை பிடித்து கொண்டு சாப்பிடுவது, தூங்குவது, கார்டன் ஏரியாவை சுற்றி வருவது என அலப்பறை செய்கின்றனர். சவாலான இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று தலைவராகப்போவது யார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
ப்ரொமோ:1
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்